#WW2 வீரரின் 100-வது பிறந்தநாளைக் கொண்டாடிய ராணுவத்தினர்!
ஓய்வுப் பெற்ற இந்திய ராணுவ வீரர் சரண் சிங்கின் 100வது பிறந்தநாள் கொண்டாட்டத்தில், ராணுவ வீரர்கள் பலர் பங்கேற்று அவரது சேவையை சிறப்பித்தனர்.
இரண்டாம் உலகப்போரின் போது இந்திய ராணுவப்படையில் பணியாற்றியவர் பஞ்சாபை சேர்ந்த லான்ஸ் நாயக் சரண் சிங். பஞ்சாபின் ரோபார் மாவட்டத்தில் பிறந்த இவர் 1942 இல் இராணுவத்தில் சேர்ந்தார். 1959 இல் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். தற்போது தெக்வாலா கிராமத்தில் தனது இரண்டு மகள்கள் மற்றும் நான்கு மகன்கள் உடன் வசித்து வருகிறார்.
புகைப்பட கலைஞரான இவர் சிங்கப்பூர், பர்மாவில் பணியாற்றியுள்ளார். இவரது ராணுவ பணியை பாராட்டி பர்மா நட்சத்திர விருது, இந்திய சுதந்திர பதக்கம் போன்றவை வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.
இந்நிலையில் இவரது 100வது பிறந்தநாள் கடந்த சனிக்கிழமையன்று அவரது சொந்த கிராமத்தில் ராணுவத்தினரால் கொண்டாடப்பட்டது. இந்திய ராணுவம் செழுமையான மரபுகள் மற்றும் அதன் வீரர்களை கௌரவிப்பதற்கும், தேசத்துக்கு அவர்கள் ஆற்றிய பங்களிப்பை அங்கீகரிப்பதில் உள்ள அர்ப்பணிப்புக்கும் பெயர் பெற்றது. சரண் சிங் போன்ற முன்னாள் வீரர்கள் தேசத்துக்கு சேவை மட்டும்