வயநாடு நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்க 3 நாட்களில் பாலம் அமைத்த ராணுவ வீரர்கள்!
கேரள மாநிலம் வயநாட்டில் சிக்கியுள்ளவர்களை மீட்க மூன்று நாள்களுக்குள் பாலத்தைக் கட்டி முடித்தது இந்திய ராணுவம்.
கேரளத்தின் பெய்த கனமழையால் பெய்லி பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதனையடுத்து, நிலச்சரிவு ஏற்பட்ட முண்டக்கை மற்றும் சூரல்மலை பகுதிகளுக்கு மீட்புக் குழுவினர் செல்வதற்கும், நிவாரண உதவிகளை வழங்குவதற்கு சிக்கல் ஏற்பட்டது. 24 டன் எடை கொண்ட இந்தப் பாலம் 90 டன் வரையிலான எடையைத் தாங்கக்கூடியது. இந்நிலையில், இடிந்த பெய்லி பாலத்தினை சரிசெய்வதற்கு இந்திய ராணுவப்படையினர் கடந்த மூன்று நாள்களாக, கனமழையிலும் போராடி வந்தனர்.
இதனைத் தொடர்ந்து, ராணுவ வீரர்கள் 190 அடி நீளமுள்ள பெய்லி பாலத்தை கட்டும் பணியை இன்று மாலையில் முழுவதுமாக முடித்தனர். இதனை தொடர்ந்து, 350 பேர் கொண்ட ராணுவக் குழுவினர், போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
Class 24 Bailey Bridge launched by #Army today Kerala. The bridge will connect Chooralmala with Mundakkai over Iruvanipzha river & can take load of 24 Tons.
As per traditions, Commander was the first one to go on the bridge.@DefencePROkochi @DefencePROTvm @IaSouthern pic.twitter.com/tCpa90tYq6
— PRO Nagpur, Ministry of Defence (@PRODefNgp) August 1, 2024