"இதுவரை நான் செய்த சத்தியத்தை மீறாமல் காப்பாற்றி வருகிறேன்" - பாமக நிறுவனர் ராமதாஸ்!
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், "மீண்டும் கிராமங்களை நோக்கி" என்ற தலைப்பில் திண்ணை பிரச்சாரத்தை தொடங்கினார். பாமகவில் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையே கருத்து வேறுபாடுகள் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், இந்த பிரச்சாரம் முக்கியத்துவம் பெறுகிறது. சூனாம்பேடு கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் மத்தியில் உரையாற்றிய பாமக நிறுவனர் ராமதாஸ், அரசின் மதுக் கொள்கைகளை கடுமையாக விமர்சித்தார்.
நாங்கள் ஒரு சொட்டு மது இருக்கக்கூடாது என பேசி வருகிறோம். மேலும், இளம் தலைமுறையினர் கஞ்சாவுக்கு அடிமையாவது குறித்து கவலை தெரிவித்தார். இப்போது சின்ன பசங்கள் கஞ்சாவிற்கு அடிமையாகி விடுகிறார்கள். கஞ்சாவுக்கு அடிமையானால் மீள முடியாது. எனது வாழ்க்கை ஒரு போராட்டம் தான், தனது அரசியல் வாழ்வு முழுக்க போராட்டங்களாலேயே ஆனது.
நான் நாளும் உழைக்கிறேன். நான் எந்த பதவிக்கும் போக விரும்பவில்லை, என் வாழ்நாள் முழுவதும் எந்த பதவிக்கும் போக மாட்டேன் என சத்தியம் செய்து இவர்களை எல்லாம் பெரிய பெரிய பதவிக்கு அனுப்பி அழகு பார்த்துள்ளேன். பெண்களைப் பார்த்து, நீங்கள் நினைத்தால் இந்த ஆட்சியை எங்களிடம் கொடுத்துவிட்டால், உங்களுக்கு எல்லா வரமும் சட்டம் மூலமாக செய்து தருகிறோம் என்று வேண்டுகோள் விடுத்தார். இந்த பிரச்சாரத்தில் மாநில வன்னியர் சங்கத் தலைவர் பு.தா.அருள்மொழி, செயலாளர் திருக்கச்சூர் ஆறுமுகம் மற்றும் ராமதாஸால் நியமிக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.