பனி சூழந்த ஜம்மு காஷ்மீர்... உமர் அப்துல்லா பதிவிட்ட வீடியோ வைரல்...
ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா, காஷ்மீரில் பனி சூழ்ந்துள்ள அழகிய புகைப்படங்களை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் தற்போது சீசன் தொடங்கி உள்ள நிலையில், கட்டுக்கடங்காத வகையில் இந்த வருடம் பனிப் பொழிவு காணப்படுகிறது. வெள்ளைப் போர்வை கொண்டு போர்த்தியது போல் காணும் இடம் எல்லாம் பனி சூழ்ந்து காட்சி அளிக்கிறது. மேலும் ரம்மியமான சூழல் ஜம்மு காஷ்மீரில் நிலவுவதால் உள்நாடு மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகளின் காஷ்மீர் வருகை அதிகரித்து உள்ளது.
இந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா, காஷ்மீரில் பனி சூழ்ந்துள்ள அழகிய புகைப்படங்களை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதனுடன் பனியில் பனிச்சறுக்கு விளையாடும் வீடியோவையும் அவர் பதிவிட்டுள்ளார். இந்த பதிவுகள் ஆயிரக்கணக்கான பார்வைகளையும் கருத்துகளையும் பெற்றுள்ளன.
Nothing like a late evening walk in Gulmarg. It’s as beautiful after sunset as it is during the day. pic.twitter.com/RBsUFAearG
— Omar Abdullah (@OmarAbdullah) February 21, 2024
When you start the day with views like these………. pic.twitter.com/OU12JrU4Ov
— Omar Abdullah (@OmarAbdullah) February 21, 2024
The fresh powder made the going a bit slow but it made for spectacular skiing on the first day 🎿 #Gulmarg #skiing pic.twitter.com/hU6I3q2RNy
— Omar Abdullah (@OmarAbdullah) February 22, 2024