For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"ஸ்மார்ட்போன் பயன்பாட்டால் 80 கோடி இந்தியர்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர்" - ஐ.நா. பொதுசபை தலைவர்!

11:44 AM Aug 03, 2024 IST | Web Editor
 ஸ்மார்ட்போன் பயன்பாட்டால் 80 கோடி இந்தியர்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர்    ஐ நா  பொதுசபை தலைவர்
Advertisement

ஸ்மார்ட்போன் பயன்பாடு காரணமாக இந்தியாவில் 80 கோடி பேர் வறுமையின் பிடியிலிருந்து விடுபட்டுள்ளதாக ஐ.நா. பொதுசபை தலைவர் டென்னிஸ் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

Advertisement

ஐ.நா.வின் உணவு மற்றும் விவசாய அமைப்பு 'தற்போதைய மற்றும் எதிர்கால சந்ததியினருக்கான பசியற்ற முன்னேற்றத்தை துரிதப்படுத்துதல்' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடத்தியது.  இதில் கலந்து கொண்ட  ஐ.நா. பொதுசபை தலைவர்  டென்னிஸ் பிரான்சிஸ் பேசியதாவது, "கடந்த 5 - 6 ஆண்டுகளில் 80 கோடி மக்களை வறுமையில் இருந்து வெளியேற்றியுள்ளது இந்தியா.  இதற்கான முன்னெடுப்பு பணிகளுக்காக இந்தியாவுக்கு பாராட்டுகளை தெரிவிக்கிறேன்.

இந்திய கிராமப்புறங்களில் உள்ள மக்கள் ஸ்மார்ட்போன் மூலம் பணத்தை செலுத்தவும், பெறவும் ஆர்வம் காட்டுகின்றனர்.  ஸ்மாட்போன் பயன்பாட்டால்தான் இத்தனை கோடி பேரை வறுமையிலிருந்து மீட்க இந்தியாவால் முடிந்துள்ளது.  ஆனால், தெற்காசியாவின் பல நாடுகளில் இதுபோன்ற டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.

வங்கி அமைப்புடன் ஒருபோதும் தொடர்பில்லாத இந்திய கிராமப்புற விவசாயிகள், தற்போது தங்கள் அனைத்து வணிகங்களையும் தங்களது ஸ்மார்ட்போனில் செய்து முடிக்கின்றனர்.  இந்தியாவில் அநேகமாக எல்லோரிடத்திலும், ஸ்மார்ட்போனும், இணைய இணைப்பும் உள்ளது. அவர்கள் வறுமையிலிருந்து மீள்வதற்கு ஏதோ ஒரு வகையில் அது உதவுகிறது. இதேபோல வறுமையிலிருந்து மீள, பிற நாடுகளும் டிஜிட்டல் மயமாக்கத்துக்கு அதிக முன்னுரிமை தர வேண்டும்."

இவ்வாறு  ஐ.நா. பொதுசபை தலைவர்  டென்னிஸ் பிரான்சிஸ்  தெரிவித்தார்.

Tags :
Advertisement