இங்கிலாந்தில் சிறிய ரக விமானம் வெடித்து விபத்து - 4 பேர் உயிரிழப்பு!
இங்கிலாந்தில் இருந்து புறப்பட்ட சிறிய ரக விமானம் வெடித்து சிதறியதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
08:07 AM Jul 15, 2025 IST | Web Editor
Advertisement
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் சவுத் எண்ட் விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்தில் இருந்து நெதர்லாந்து செல்வதற்காக சிறிய விமானம் ஒன்று புறப்பட்டுள்ளது.
Advertisement
அப்போது ஜீஷ் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான அந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் விமானத்தை அவசரமாக தரையிறக்க முயன்ற போது விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். அதேசமயம், விபத்துக்கான காரணம் குறித்து விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் சவுத் எண்ட் விமான நிலையம் மூடப்பட்டு விமானங்கள் அனைத்தும் அருகில் உள்ள விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன.