Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

திண்டுக்கல் சந்தையில் சின்ன வெங்காயம் விலை தொடர் வீழ்ச்சி! விவசாயிகள் வேதனை!

10:20 AM Jan 23, 2024 IST | Web Editor
Advertisement

திண்டுக்கல் சந்தைக்கு வழக்கத்தைவிட சின்ன வெங்காய வரத்து  அதிகரித்துள்ளதால்,  விலை குறைந்துள்ளது. 

Advertisement

தமிழ்நாட்டின் மிகப் பெரிய வெங்காயச் சந்தை திண்டுக்கல்லில் உள்ளது.  தென் மாவட்ட அளவில்,  திண்டுக்கல் சந்தையிலிருந்துதான் வெளிநாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதி செய்யப்படுகிறது.  இந்த சந்தை  115-க்கும் மேற்பட்ட மண்டிகளுடன் செயல்பட்டு வருகிறது.  இந்த சந்தை திங்கள்,  புதன்,  வெள்ளி என வாரத்தில் 3 நாட்கள் நடைபெறும்.

திண்டுக்கல்,  திருச்சி,  திருப்பூர்,  நாமக்கல்,  தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் அறுவடை செய்யப்படும் சின்ன வெங்காயம்,  இங்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ஆந்திரா,  கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களிலிருந்தும் சின்ன வெங்காயம் இந்த சந்தைக்கு விற்பனைக்கு வருகிறது.

இதையும் படியுங்கள்: சமுத்திரகனி நடிக்கும் “ராமம் ராகவம்” திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது!

திண்டுக்கல் சந்தைக்கு,  ஒவ்வொரு முறையும் தலா 150 டன் முதல் 250 டன் சின்ன வெங்காயம் விற்பனைக்கு வருவது வழக்கம்.   இந்த நிலையில்,  இதுவரை இல்லாத வகையில் 470 டன் சின்ன வெங்காயம் விற்பனைக்கு வந்தது.  இதன் காரணமாக, கடந்த சில நாள்களாக வீழ்ச்சி அடைந்து வரும் வெங்காயத்தின் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளது.

திண்டுக்கல் சந்தையில் வெங்காய கொள்முதல் விலை ரூ.15 முதல் ரூ.25-ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.  ஒட்டன்சத்திரம் சந்தையின் கொள்முதல் விலை ரூ.22-ஆக இருந்தது.  இலங்கை, மாலத்தீவு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் வெங்காயத்தின் விலை ரூ.35-ஆக நிர்ணயிக்கப்பட்டது.  இலங்கைக்கு மட்டும் 120 டன் சின்ன வெங்காயம் ஏற்றுமதி செய்யப்படுவதால்,  வெங்காயம் தேக்கமடையாது என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
DindigulDindigul Marketnews7 tamilNews7 Tamil Updatesonionpricetamil nadu
Advertisement
Next Article