For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#ShahRukhKhan-ன் இளமை ரகசியம் என்ன? அவரே தெரிவித்த தகவல்!

11:01 AM Aug 17, 2024 IST | Web Editor
 shahrukhkhan ன் இளமை ரகசியம் என்ன  அவரே தெரிவித்த தகவல்
Advertisement

ஷாருக்கான் 'காலை ஐந்து மணி முதல் காலை 9 மணி வரை தூங்குவதாகவும், ஒரு வேளை மட்டுமே சாப்பிடுவதாகவும் கூறியிருப்பது அவரது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. 

Advertisement

நடிகர் ஷாருக்கானின் கட்டுடலை காணும் போது அவரது உணவு முறை, உடற்பயிற்சி உள்ளிட்ட தகவல்களை தெரிந்துகொள்ள அனைவருக்கும் ஆர்வம் வரும். அப்படி இருக்க பிரபல ஆங்கில நாளிதழுக்கு பேட்டி கொடுத்த ஷாருக்கான் தனது வாழ்க்கை முறை பற்றி மனம் திறந்து பேசினார். இது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

அதில், நான் காலை 5 மணிக்கு தான் தூங்கச்செல்வேன். ஷூட்டிங் இருப்பதை பொறுத்து காலையில் 9 அல்லது 10 மணிக்கு எழுவேன். முன்னதாக வேலை முடிந்து அதிகாலை 2 மணிக்கு வீட்டிற்கு வந்து குளித்துவிட்டு தூங்குவதற்கு முன் உடற்பயிற்சி செய்வேன். ஒரு வேளை மட்டும் சாப்பிடுவதோடு, நாள் ஒன்றுக்கு அரை மணி நேரம் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக கொண்டுள்ளேன். இவ்வாறு நடிகர் ஷாருக்கான் தனது தனிப்பட்ட வாழ்க்கை முறையை பற்றி கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், கொரோனா ஊரடங்கு காலத்தை பயனுள்ள வகையில் கழித்தது குறித்தும் மனம் திறந்துள்ளார். குறிப்பாக 55 வயதில் தனக்கு ஓய்வு கிடைத்ததாகவும், அப்போது அனைவரும் இத்தாலிய சமையலை கற்றுக்கொள்ளுங்கள், உடற்பயிற்சி செய்யுங்கள் என்று கூறியிருந்ததையும் நினைவு கூர்ந்தார். மேலும் அந்த நேரத்தில் தனது உடற்கட்டை நேர்த்தியாக மேம்படுத்திக்கொண்டதாகவும் ஷாருக்கான் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில், சுவிட்சர்லாந்தில் உள்ள லோகார்னோவில் நடைபெற்ற 77-வது லோகார்னோ திரைப்பட விழாவில் நடிகர் ஷாருக்கானுக்கு 'வாழ்நாள் சாதனையாளர் விருது' வழங்கப்பட்டது. அப்போது செய்தியாளர்கள் சந்திப்பில், அவர் நடிக்கவுள்ள கிங் படம் குறித்து கேள்வி பதில் அளித்தார். அதில், "நான் நடிக்கவுள்ள அடுத்த படம் 'கிங்'. இப்படத்தை சுஜாய் கோஷ் இயக்குகிறார். பதான் படத்தைத் தயாரித்த சித்தார்த் ஆனந்த், ‘கிங்’ படத்தைத் தயாரிக்கிறார். இது ஒரு அதிரடியான ஆக்ஷன் டிராமா படம். மிகவும் சுவாரசியமாக இருக்கும்.

நீண்ட நாட்களாகவே இம்மாதிரியான ஒரு படத்தில்தான் நடிக்க ஆசைப்பட்டேன். அதற்கு சுஜாய் கோஷ் சரியான தேர்வாக இருப்பார் என்று நாங்கள் நினைத்தோம். நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு கூல், மாஸ், ஆக்ஷன், எமோஷனல் படத்தை உருவாக்குகிறோம்” என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார். இப்படத்தில் ஷாருக்கானின் மகள் சுஹானா நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement