சுதா கொங்கரா இயக்கத்தில் SK25 - படப்பிடிப்பு எப்போது?
நடிகர் சிவகார்த்திகேயனின் 25வது படத்தை சுதா கொங்கரா இயக்க உள்ள நிலையில் அதன் படப்பிடிப்பு குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளி பண்டிகைக்கு வெளியான திரைப்படம் ‘ அமரன் ‘ . உலக நாயகன் கமலஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் ரூ.50 கோடி பட்ஜெட்டில் இப்படம் தயாரிக்கப்பட்டது . இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்திருந்தார் . மறைந்த முன்னாள் ராணுவ வீரர் மேஜர் முகுந்தின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்ட படத்தில் இருவரும் எதார்த்தமான நடிப்பை வெளிபடுத்தியது அதிகம் பாராட்டப்பட்டது.
இப்படம் நல்ல வரவேற்பை பெற்று சுமார் ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூலித்த இப்படம் கடந்த வாரம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. அமரன் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் எஸ்.கே.23 நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இதைத் தொடர்ந்து, சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் தனது 24-வது படத்திலும் இதன் பின்னர் சுதா கொங்காரா இயக்கத்தில் 25-வது படத்திலும் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. எஸ்கே - 25 படத்தில் நடிகர்கள் ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் நடிக்க உள்ளதாகவும் ரூ. 150 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு இம்மாத இறுதியில் சென்னையில் துவங்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.