For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

புதிய லுக்கில் SK - இணையத்தில் வைரலாகும் படங்கள்.!

09:48 PM Dec 16, 2023 IST | Web Editor
புதிய லுக்கில் sk   இணையத்தில் வைரலாகும் படங்கள்
Advertisement

நடிகர் சிவகார்த்திகேயனின் புதிய லுக் படங்கள் தற்போது இணையதளத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகின்றன.

Advertisement

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் கால் பதித்து தற்போது தமிழ் சினிமாவின் செல்லப் பிள்ளையாக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். அண்மையில் இவரது நடிப்பில் வெளியான மாவீரன் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்படத்தைத் தொடர்ந்து கமல்ஹாசன் தயாரிப்பில் புதிய படம் ஒன்றில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.

தற்காலிகமாக 'எஸ்.கே 21' என தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தை ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்து வருகிறார். இந்த  படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ அதிகாரியாக நடிப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கெனவே படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்து முடிந்த நிலையில் தற்போது இரண்டாம்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதற்காக சிவகார்த்திகேயன் தனது தோற்றத்தை முற்றிலும் மாற்றியுள்ளார். க்ளீன் ஷேவ் செய்து இளமைத் தோற்றத்தில் அவர் காணப்படுகிறார். இந்த புகைப்படம்தான்  இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags :
Advertisement