Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

SK 25 படத்தின் டைட்டில், டீசர் வெளியீடு !

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் எஸ்கே25 திரைப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகியுள்ளது.
06:54 PM Jan 29, 2025 IST | Web Editor
featuredImage featuredImage
Advertisement

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் 'அமரன்'. இத்திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் ரூ.300 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement

அதே நேரத்தில் இவர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தனது 23வது படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்ததாக சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் தனது 24-வது படத்தில் நடிக்க உள்ளார். இதற்கிடையே இவர் சுதா கொங்கரா இயக்கத்தில் எஸ்கே 25 படத்தில் நடிப்பதற்க்கு ஒப்பந்தமாகியுள்ளார்.

இப்படம் இந்தி திணிப்பு தொடர்பான கதைகளத்தை கொண்டு உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. இதில் வில்லனாக ஜெயம் ரவி நடிக்க உள்ளார்.மேலும் இப்படத்தில் நடிகை ஸ்ரீலீலா மற்றும் அதர்வா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். இந்த படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்க்கு ரவி கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்ய உள்ளார்.

இப்படம் சிவகார்த்திகேயனுக்கு 25வது படமாகவும், ஜி.வி.பிரகாஷ்க்கு 100வது படமாகவும் அமைகிறது. சுமார் ரூ.150 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உருவாகிறது.

இந்நிலையில், இப்படத்தின் டைட்டில் வீடியோவை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. இப்படத்திற்கு பராசக்தி என்று பெயரிட்டுள்ளனர். நடிகர் திலகம் சிவாஜியின் முதல் படத்தின் பெயர் பராசக்தி என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
Director Sudha KonkaraParasakthiSiva karthikeyanTeasertitle
Advertisement