Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

நடிகர் சிவகார்த்திகேயன் பிறந்தநாளில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்!

09:42 PM Feb 11, 2024 IST | Web Editor
Advertisement

நடிகர் சிவகார்த்திகேயனின் பிறந்தநாள் அன்று 'SK 23' திரைப்படத்தின் பூஜை நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

சிவகார்த்திகேயன் நடிப்பில் பொங்கல் திருவிழாவையொட்டி வெளியான ’அயலான்’ திரைப்படம் வெற்றிப்படமாக அமைந்ததுடன் இதுவரை ரூ.90 கோடி வரை வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ‘அயலான்’  திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதையும் படியுங்கள் ; ஆண்ட கட்சிக்கும், ஆளும் கட்சிக்கும் மாற்று கட்சி அமமுக என தமிழ்நாடு மக்கள் நினைக்கின்றனர் - டிடிவி தினகரன் பேச்சு!

இதையடுத்து, சிவகார்த்திகேயனின் 21வது திரைப்படமாக கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்து வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடித்து வருகிறார். மேலும், இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.

இத்திரைப்படத்தின் பெயர் அறிவிப்பு மற்றும் டீசர் விரைவில் வெளியாகும் எனக் கூறப்பட்ட நிலையில், எஸ்கே – 21 டீசரை சிவகார்த்திகேயனின் பிறந்தநாளான பிப்.17 ஆம் தேதியில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து, எஸ்கே 22 பற்றிய தகவல் வெளியாகாத நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எஸ்கே 23 திரைப்படத்தின் பூஜை சிவகார்த்திகேயனின் பிறந்தநாளான பிப்.17 ஆம் தேதியில் அன்று  நடக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

Tags :
actorfansmurugadosssivakarthikeyanSKSK 23Sk21skbirthdayupdate
Advertisement
Next Article