For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சிவகார்த்திகேயன் பிறந்தநாளில் “SK 21" டீசர்?

08:53 PM Feb 10, 2024 IST | Web Editor
சிவகார்த்திகேயன் பிறந்தநாளில் “sk 21  டீசர்
Advertisement

ராஜ்கமல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும், ‘எஸ்கே - 21’ படத்தின் டீசரை சிவகார்த்திகேயனின் பிறந்தநாளான பிப்.17-ம் தேதியில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

சிவகார்த்திகேயன் நடிப்பில் பொங்கல் திருவிழாவையொட்டி வெளியான ’அயலான்’ திரைப்படம் வெற்றிப்படமாக அமைந்ததுடன் இதுவரை ரூ.90 கோடி வரை வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ‘அயலான்’  திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதையடுத்து, சிவகார்த்திகேயனின் 21வது திரைப்படமாக கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்து வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடித்து வருகிறார். மேலும், இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீர் மற்றும் சென்னையில் நடைபெற்று வருகிறது.

இத்திரைப்படத்தின் பெயர் அறிவிப்பு டீசர் விரைவில் வெளியாகும் எனக் கூறப்பட்ட நிலையில், இயக்குநர் நெல்சன் டீசரைப் பார்த்ததுடன் பாராட்டியுள்ளார். இந்நிலையில், எஸ்கே - 21 டீசரை சிவகார்த்திகேயனின் பிறந்தநாளான பிப்.17 ஆம் தேதியில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Tags :
Advertisement