For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலி | வெள்ளத்தால் சேதமடைந்த கூட்டு குடிநீர் திட்ட நீரேற்று நிலையங்களில் சிவ்தாஸ் மீனா ஆய்வு |

01:29 PM Dec 24, 2023 IST | Web Editor
நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலி   வெள்ளத்தால் சேதமடைந்த கூட்டு குடிநீர் திட்ட நீரேற்று நிலையங்களில் சிவ்தாஸ் மீனா ஆய்வு
Advertisement

நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக,  தாமிரபரணி ஆற்றங்கரையில் வெள்ளத்தால் சேதமடைந்தத கூட்டு குடிநீர் திட்ட நீரேற்று நிலையங்களின் சீரமைப்பு பணிகள் குறித்து தமிழ்நாடு தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Advertisement

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட தாமிரபரணி ஆற்றங்கரைகளில் 100-க்கும் மேற்பட்ட குடிநீர் நீரேற்று நிலையங்கள் உள்ளன.  கடந்த டிச. 17, 18ம் தேதிகளில் பெய்த அதிகனமழை காரணமாக திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரி தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள கூட்டு குடிநீர் திட்ட நீரேற்று நிலையங்கள் வெள்ளத்தால் கடும் சேதமடைந்தன.

தென் மாவாட்டங்களில் ஏற்பட்ட கடும்  வெள்ளப்பெருக்கால் குடிநீர் நீரேற்று நிலையங்களின் மோட்டார்கள் பழுதாகிய நிலையில் உள்ளன. மேலும் கூட்டுக் குடிநீர் திட்ட பைப் லைன்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இது குறித்து அன்மையில் நியூஸ் 7 தமிழ் செய்தி வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் சேதமடைந்த குடிநீர் நீரேற்று நிலையங்களை தமிழ்நாடு தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதனையடுத்து சிவ்தாஸ் மீனா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்  கூறியதாவது:

"குடிநீர் நீரேற்று நிலையங்களின் சீரமைப்பு பணிகளுக்காக, தமிழ்நாடு முழுவதும் இருந்து குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர்கள் மற்றும் பணியாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளத்தால் சேதமடைந்த 70 குடிநீர் நீரேற்று நிலையங்களில், 34 குடிநீர் திட்டங்கள் ஏற்கனவே சரி செய்யப்பட்டுள்ளது. 36 குடிநீர் திட்டங்கள் சரி செய்யப்பட வேண்டி உள்ளன. அதற்கான பணிகள் விரைவில்  தொடங்கும்.

போர்க்கால அடிப்படையில் பணிகள் நடைபெற்று, சேதமடைந்த கூட்டு குடிநீர் திட்ட நீரேற்று நிலையங்கள் விரைவில் சரி செய்யப்படும்."

இவ்வாறு தமிழ்நாடு தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்தார்.

Tags :
Advertisement