Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சிவகார்த்திகேயனின் ‘SK25' படப்பிடிப்பு தொடக்கம்!

06:07 PM Dec 14, 2024 IST | Web Editor
Advertisement

சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தின் படப்பிடிப்பு துவங்கியது.

Advertisement

அமரன் திரைப்படத்தின் வெற்றிக்குப் பின் நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் பெரிய நட்சத்திர நடிகராக வளர்ந்துள்ளார். இப்படத்திற்குப் பின் தன் சம்பளத்தையும் ரூ. 60 கோடி வரை உயர்த்த திட்டமிட்டுள்ளதாகத் தகவல். அமரன் படத்தை முடித்தபின் இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸின் படமொன்றில் நடித்து வருகிறார். எஸ்கே - 23 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதைத் தொடர்ந்து, இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் தன் 24-வது படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இயக்குநர் சுதா கொங்காரா இயக்கத்தில் தன் 25-வது படத்தின் படப்பிடிப்பில் இணைந்துள்ளார். ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு இன்று சென்னையில் துவங்கியுள்ளது.

இதில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவிக்கு இடையேயான சில காட்சிகள் எடுக்கப்படுகிறதாம். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் எஸ்கே - 25 படத்தில் நடிகர்கள் ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
News7TamilshootingsivakarthikeyanSK 25sudha kongara
Advertisement
Next Article