மகனுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய சிவகார்த்திகேயன்!
நடிகர் சிவகார்த்திகேயன் தனது மகன் குகேஷுடன் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடியதை இணையதளத்தில் பகிர்துள்ளார்.
அவரது திறமையின் மூலம் சின்ன திரையிலிருந்து வந்த சிவகார்த்திகேயன் வெள்ளித்திரையில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளர்ந்துள்ளார். அவரது கடைசி படமான அமரன் திரைப்படம் உலகளவில் ரூ. 340 கோடிக்கும் மேல் இப்படம் வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்தது. அவரது பட வரிசையில் அதிக வசூல் ஈட்டிய திரைப்படமாக அமரன் படம் மாறியுள்ளது. அடுத்ததாக ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தனது 23வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் சமீபத்தில் தனது 25வது திரைப்படத்தின் அறிவிப்பையும் வெளியிட்டார். இப்படத்தை இயக்குனர் சுதா கொங்கரா இயக்கி வருகிறார்.
இதனிடையே, சிவகார்த்திகேயன் அமரன் பட பாத்திரத்தில் ராணுவ உடை அணிந்து, சமையலறையில் இருந்த தனது மனைவிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விடியோ 107 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனைப் படைத்தது.
இந்த நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் தனது மகன் குகேஷுடன் கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களையும் அவர் வெளியிட்டுள்ளார். இப்புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துவருவதுடன், சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.