Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

‘மதராஸி’ படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த சிவகார்த்திகேயன் - எப்போது தெரியுமா?

நடிகர் சிவகார்த்திகேயன் தனது ‘மதராஸி’ படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளார்.
07:00 PM Apr 14, 2025 IST | Web Editor
நடிகர் சிவகார்த்திகேயன் தனது ‘மதராஸி’ படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளார்.
Advertisement

ஏ.ஆர். முருகதாஸ் - சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம்  மதராஸி. ஸ்ரீ லட்சுமி மூவீஸ் நிறுவனம் தயாரிக்கும்  இப்படத்தில் துப்பாக்கி படத்தில் வில்லனாக நடித்து பிரபலமான வித்யுத் ஜம்வால், பிஜு மேனன், ருக்மிணி வசந்த்  உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

Advertisement

இப்படத்தின் டைட்டில் டீசர் சிவகார்த்திகேயன் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாகிவரும் இப்படம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் மதராஸி படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி படத்தின் புதிய போஸ்டரை சிவகார்த்திகேயன் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில் இப்படம் வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி இப்படம் திரைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
AR MurugadossMadharasisivakarthikeyan
Advertisement
Next Article