Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சிவகங்கை: பள்ளி மாணவர்களை வேலை வாங்கிய வீடியோ வைரல்!

10:28 AM Nov 14, 2023 IST | Student Reporter
Advertisement

சிவகங்கையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில், பள்ளி மாணவர்களை வேலை வாங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

Advertisement

சிவகங்கை மாவட்டம்,  தேவகோட்டையில் என்.எஸ்.எம்.வி.பி.எஸ் என்ற அரசு  உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.  இங்கு சுமார் 1500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.  மேலும் 60-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அலுவலக உதவியாளர்கள்  பணிபுரிந்து வருகின்றனர்.

 

இதையும் படியுங்கள்:  ஜிகர்தண்டா  டபுள் எக்ஸ் படத்தின் ஒய்யாரம் பாடல் வெளியானது!

இந்த பள்ளியில், மாணவர்களை அலுவலக வேலைகளுக்கு  பயன்படுத்துவதாக ஏற்கனவே புகார் வந்தன.  இந்த நிலையில் மாணவர்கள் சிலர் தலைமையாசிரியர் அறையில் தேர்வு தாள்களை அடுக்கி வைப்பது போலவும்,  மூட்டையில் வைத்து கட்டுவது போலவும் வீடியோக்கள் வெளியாகின.  இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மாணவர்களை அலுவலக வேலைகளுக்கும்,  இதர வேலைக்கும் பயன்படுத்த கூடாது என பள்ளி கல்வித்துறை ஏற்கனவே உத்தரவிட்டது.  இதனிடையே மாணவர்கள் தலைமையாசிரியர் அறையில் வேலை செய்வது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய சம்பவம் பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  இது குறித்து கல்வித்துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Tags :
devakottaiGovernment aided schoolnews7 tamilNews7 Tamil UpdatesparentsRequestSchoolSchool Education Departmentschool Studentssivagangaistudentsvideo viralViral
Advertisement
Next Article