Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

நெருக்கடிநிலை தந்த இந்திரா காந்தியை நெருக்கடிக்குள்ளாக்கிய #SitaramYechury

09:05 PM Sep 12, 2024 IST | Web Editor
Advertisement

அவசரநிலை பிரகடனத்தின்போது நாட்டின் அனைத்து தரப்பு மக்களை நெருக்கடிக்குள்ளாக்கிய இந்திரா காந்தியையே நெருக்கடிக்குள்ளாக்கி அவரது வேந்தர் பதவியை ராஜினமா செய்ய வைத்ததில் சீதாராம் யெச்சூரிக்கு முக்கிய பங்கு உண்டு. அது என்ன சம்பவம் விரிவாக பார்க்கலாம்.

Advertisement

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளரும், மூத்த அரசியல்வாதியுமான சீதாராம் யெச்சூரி உடல்நலக்குறைவால் இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 72. அவரின் மறைவிற்கு நாட்டின் முக்கிய தலைவர்களும், அரசியல்வாதிகளும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சீதாராம் யெச்சூரி மாணவர் பருவத்தில் இருந்தே தீவிரமாக அரசியல் செயல்பாடுகிளில் களமிறங்கியவர்.

கல்லூரியில் படிக்கும்போது இந்திய மாணவர் சங்கத்தில் தன்னை இணைத்துக் கொண்ட சீதாராம் யெச்சூரி ஜெ.என்.யூ பல்கலைகழகத்தில் 3முறை மாணவர் சங்கத் தலைவராக இருந்தவர். இதன் பின்னர் இந்திய மாணவர் சங்கத்தின் அகில இந்திய இணைச் செயலாளராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.

நெருக்கடி தந்த இந்திரா காந்தியை நெருக்கடிக்குள்ளாக்கியவர்

சீதாராம் யெச்சூரி தனது முதுகலைப் பட்டத்தை டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருக்கும்போது மாணவர் அமைப்பில் மிகத் தீவிரமாகவும் , மாணவர் அமைப்புகளின் அறியப்பட்ட ஒருவராகவும் சீதாராம் யெச்சூரி இருந்தார். அப்போதுதான் எமர்ஜென்சி எனப்படும் அவசர நிலை பிரகடனத்தை அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அமல்படுத்தினார்.

எமர்ஜென்சிக்கு எதிராக மாணவர்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்திய சீதாராம் யெச்சூரி 1975ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். இதன் விளைவாக சில மாதங்கள் சிறையில் இருந்த அவர், வெளியே வந்ததும் ஜேஎன்யு மாணவர் சங்கத் தலைவராகத் தேர்வானார். அப்போது ஜேஎன்யு பல்கலைகழகத்தின் வேந்தராக இருந்த இந்திரா காந்தி பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

இந்திரா காந்தி பதவி விலக மறுக்கவே சீதாராம் யெச்சூரி தனது சக மாணவர்களுடன் சேர்ந்து போராட்டத்தில் இறங்கினார். போராட்டத்தை கட்டுப்படுத்த நினைத்த பல்கலைகழகத்தின் துணைவேந்தராக இருந்த பி.டி. நாக் சவுத்ரியை வளாகத்திற்குள் நுழைய அனுமதிக்கவில்லை. ஆத்திரம் கொண்ட அரசு இதற்குப் பதிலடி தரும் வகையில் பல்கலைக்கழகத்தை மூட உத்தரவிட்டது. இதற்கு எதிராக ஜேஎன்யு மாணவர்களும் ஆசிரியர்களும் இணைந்து இந்த உத்தரவை காலி செய்தனர். பல்கலைக்கழகம் வழக்கம் போல் இயங்குவதை உறுதி செய்தனர்.

இதனைத் தொடர்ந்து 1977ல் எமர்ஜென்சி வாபஸ் பெறப்பட்டது. இதன் பிறகு இந்திய மக்களவைத் தேர்தலை சந்தித்தது. இந்த தேர்தலில் இந்திரா காந்தி படுதோல்வி அடைந்தார். எமர்ஜென்சிக்கு எதிராக போரடிய கட்சிகள் ஒன்றிணைந்து ஜனதா கூட்டணியை உருவாக்கினர். இந்த கூட்டணி தேர்தலில் வெற்றி பெற்று மொரார்ஜி தேசாய் பிரதமரானார்.

பிரதமர் பதவி இல்லாதபோதும் ஜேஎன்யு வேந்தர் பதவியைத் இந்திரா காந்தி தக்க வைத்துக் கொண்டார். எனவே அவர் உடனடியாக வேந்தர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி சீதாராம் யெச்சூரி தலைமையில் மாணவர்கள் இந்திரா காந்தியின் வீட்டிற்குப் பேரணியாகச் சென்றனர். 500 பேர் சென்றிருந்த நிலையில் 5 பேருக்கு மட்டுமே இந்திரா காந்தியை நேரில் சந்திக்க வாய்ப்பளிக்கப்பட்டது.

இதனை சீதாராம் யெச்சூரி ஏற்கவில்லை பிறகு சில நிமிடங்களில் இந்திரா காந்தியே வெளியே வந்தார். போராட்டத்தை முன்னின்று நடத்திய யெச்சூரிக்கு அருகில் மாணவர்கள் சூழ இந்திரா காந்தி அதில் நின்று அவர்கள் சொல்வதை கேட்டார். அப்போது அவருக்கு எதிரான தீர்மானங்களை அவர் முன்பாகவே சீதாராம் யெச்சூரி வாசித்தார். அந்த தீர்மானங்களையும் அவர் வாங்கிக் கொண்டார் அவர் இரண்டு நாட்களுக்குப் பிறகு அவர் வேந்தர் பதவியை ராஜினாமா செய்தார். அப்போது எடுக்கப்பட்ட படம் ஜேஎன்யு வரலாற்றில் மிக முக்கியமான ஒன்றாக இன்றளவும் கருதப்படுகிறது.

Tags :
CongresscpimemergencySitaram Yechury
Advertisement
Next Article