Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சீதாராம் யெச்சூரிக்கு செயற்கை சுவாசத்துடன் தீவிர சிகிச்சை! #CPIM தகவல்!

12:34 PM Sep 10, 2024 IST | Web Editor
Advertisement

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் சீதாராம் யெச்சூரிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

Advertisement

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலா் சீதாராம் யெச்சூரி கடந்த ஆகஸ்ட் 19ஆம் தேதி டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் நுரையீரல் தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு எய்ம்ஸ் மருத்துவமனையின் மூத்த மருத்துவர்கள் அடங்கிய குழு தீவிர சிகிச்சை அளித்து வரும் நிலையில், அவரின் உடலில் ஏற்பட்டுள்ள நோயின் தீவிரத்தன்மை குறித்து மருத்துவமனை தரப்பில் அறிக்கை வெளியிடப்படாமல் உள்ளது.

இந்த நிலையில், சீதாராம் யெச்சூரிக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்து வருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும், இந்த இக்கட்டான சூழலில், மருத்துவமனையின் அனைத்து துறை சிறப்பு மருத்துவர்கள் குழு, அவரது உடல்நிலையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

Tags :
AIIMSchest infectioncpimcriticalnews7 tamilrespiratory supportSitaram Yechury
Advertisement
Next Article