For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சைரன் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு!

05:15 PM Jan 29, 2024 IST | Web Editor
சைரன் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு
Advertisement

நடிகர் ஜெயம் ரவி நடித்துள்ள  “சைரன்”  திரைப்படத்தின் முதல் பாடலான 'நேற்று வரை' பாடல் வெளியாகியுள்ளது.

Advertisement

Home Movie Makers சார்பில் தயாரிப்பாளர் சுஜாதா விஜய்குமார் தயாரிப்பில்,  தமிழ் திரைத்துறையின் முன்னணி நட்சத்திரமான நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் அறிமுக இயக்குநர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கும்,  புதிய திரைப்படமான “சைரன்”.

இந்த திரைப்படத்தில் யோகி பாபு, சமுத்திரக்கனி உள்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.  2 தோற்றங்களில் ஜெயம் ரவி நடித்துள்ள இந்த திரைப்படம் குடும்ப அம்சங்களுடன் ஆக்சன் திரில்லராக பிரம்மாண்ட பொருட் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது.

ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்த திரைப்படத்திற்கு செல்வகுமார் எஸ்.கே ஒழிப்பதிவு செய்துள்ளார். இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை பெற்றது.  ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான பாத்திரம் மற்றும் வித்தியாசமான கதைகளங்களால் ரசிகர்களை மகிழ்வித்து, தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர் நடிகர் ஜெயம் ரவி.

திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் திரைப்படத்தின் போஸ்ட் புரெடக்சன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.  இந்நிலையில் இப்படத்தின் டீசர் கடந்த ஆண்டு நவம்பர் 12 ஆம் தேதி வெளியாகியது.  மேலும் இந்த படத்தின் டீசர் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது.

'சைரன்' திரைப்படம் வருகிற பிப். 16 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில்,  இப்படத்தின் முதல் பாடலான 'நேற்று வரை' பாடல் வெளியாகியுள்ளது.  கவிஞர் தாமரை எழுதிய இப்பாடலை சித் ஸ்ரீராம் பாடியுள்ளார்.

Tags :
Advertisement