Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

எஸ்.ஐ.ஆர் விவகாரம் ; மக்களவையில் அமித் ஷா - ராகுல் காந்தி இடையே காரசார விவாதம்...!

மக்களவையில் எஸ்.ஐ.ஆர் விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா - எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இடையே காரசார விவாதம் நடைபெற்றது.
08:31 PM Dec 10, 2025 IST | Web Editor
மக்களவையில் எஸ்.ஐ.ஆர் விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா - எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இடையே காரசார விவாதம் நடைபெற்றது.
Advertisement

மக்களவையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக விவாதம் நடைபெற்று வருகிறது.   மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா எஸ்.ஐ.ஆர். தொடர்பாக விளக்கம் அளித்து பேசிக்கொண்டிருந்தார்.

Advertisement

அப்போது குறுக்கிட்ட மக்களவை எதிர்கட்சித்தலைவர் ராகுல் காந்தி,”மத்திய உள்துறை அமைச்சர் அவருக்கு நான் ஒரு சவால் விடுகிறேன். பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் நாம் இருவரும் எஸ்.ஐ.ஆர் விவகாரங்கள் குறித்து விவாதிக்கலாம்” என்றார்.

அதற்கு பதிலளித்த அமித்ஷா, ”30 ஆண்டுகளாக தான் சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளை வகித்து வருகிறேன். எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவர் கேட்பதற்கு மட்டும் தான் பதில் சொல்ல வேண்டும் என நினைக்கிறார். நான் என்ன பேச வேண்டும் என்பதை அவர் எப்படி முடிவு செய்ய முடியும்?” என்றார்.

மீண்டும் பேசிய ராகுல்காந்தி, ”மத்திய உள்துறை அமைச்சரின் பேச்சை கவனியுங்கள், அது அவரை தற்காத்துக் கொள்வதற்கான பேச்சு. பயந்து போய் மத்திய உள்துறை அமைச்சர் மக்களவையில் பேசி வருகிறார்” என்றார்.

அதற்கு பதிலளித்து பேசிய அமித்ஷா, ”நான் என்ன பேச வேண்டும் என்ன கூற வேண்டும் என்பதை நான் தான் முடிவு செய்வேன். இந்தியாவில் மூன்று முறை நடைபெற்ற வாக்கு திருட்டு குறித்து பேச விரும்புகிறேன். இந்திய சுதந்திரத்திற்கு பிறகு நடைபெற்ற முதல் தேர்தலில் நேரு பிரதமர் ஆனதுதான் இந்தியாவின் முதல் வாக்கு திருட்டு விவகாரம். ரேபரேலியில் இந்திரா காந்தி வென்றதும் வாக்குத் திருட்டு விவகாரம் தான். அலகாபாத் உயர்நீதிமன்றமும் அது வாக்குத் திருட்டு என தீர்ப்பளித்துள்ளது. சுதந்திரத்திற்கு பின்னர் நடைபெற்ற முதல் தேர்தலில் பெரும்பாலான பகுதிகள் வல்லபாய் பட்டேலுக்கு வாக்களித்தும் நேரு பிரதமர் ஆனார்” என்றார்.

உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களவையில் அமளியில் ஈடுபட்ட எதிர்கட்சியினர் அமித்ஷா பேசிக்கொண்டிருக்கும் போதே அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

தொடர்ந்து பேசிய அமித்ஷா, ”நாங்கள் வாக்குத்திருட்டில் ஈடுபட்டு வெற்றியடைவதாக நீங்கள் கூறுகிறீர்கள். ராமர் கோவில், பிரிவு 370 ரத்து , ஆப்ரேஷன் சிந்தூர், முத்தலாக் தடை , சி.ஏ.ஏ. ஆகியவற்றை நீங்கள் எதிர்த்த போதிலும் நாங்கள் வென்றோம். நாடு மீண்டும் ஒரு தேர்தலை சந்தித்தாலும் நாங்கள் அதில் வெல்வோம் என்றார். தற்பொழுது எஸ் ஐ ஆர் நடைமுறையை நீங்கள் எதிர்க்கிறீர்கள். எழுதி வைத்துக் கொள்ளுங்கள் பிகாரில் நடந்ததைப் போலவே மேற்கு வங்கத்திலும் தமிழ்நாட்டிலும் நீங்கள் தோற்கப் போகிறீர்கள்” என்றார்.

அமித்ஷாவின் உரையை தொடர்ந்து மக்களவை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

Tags :
amithshaIndiaNewslatestNewsloksabhaRahulGandhisir
Advertisement
Next Article