”எஸ்.ஐ.ஆர் என்பது ஒரு திணிக்கப்பட்ட கொடுங்கோன்மை” - ராகுல் காந்தி பதிவு
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்
“வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் என்ற போர்வையில், நாடு முழுவதும் குழப்பம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. இதன் விளைவாக மூன்று வாரங்களில், மாரடைப்பு, மன அழுத்தம் போன்ற காரணங்களால் 16 பி.எல்.ஓ -கள் தங்கள் உயிரை இழந்துள்ளனர். எஸ்.ஐ.ஆர் என்பது சீர்திருத்தம் அல்ல ஒரு திணிக்கப்பட்ட கொடுங்கோன்மை.
குடிமக்கள் 22 ஆண்டுகள் பழமையான வாக்காளர் பட்டியலின் ஆயிரக்கணக்கான ஸ்கேன் செய்யப்பட்ட பக்கங்களைப் புரட்டி தங்கள் வாக்குகளை கண்டிபிடிக்க வேண்டிய கட்டாயத்தை இந்திய தேர்தல் ஆணையம் உருவாக்கியுள்ளது. சரியான வாக்காளர்கள் சோர்வடைந்து தங்கள் வாக்குகளை இழப்பதும், தடையின்றி வாக்குத் திருட்டு தொடர்வதும் தான் எஸ்.ஐ.ஆரின் இதன் தெளிவாக நோக்கமாகும்.
நோக்கம் தூய்மையாக இருந்திருந்தால், டிஜிட்டல் பட்டியலானது, தேடக்கூடிய மற்றும் படிக்கக்கூடியதாக இருந்திருக்கம். இந்திய தேர்தல் ஆணையமானது கண்மூடித்தனமாக 30 நாள்களில் வேலையைத் தள்ளுவதற்குப் பதிலாக, வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலில் கவனம் செலுத்த போதுமான காலத்தை அளித்திருக்கும்.
எஸ்.ஐ.ஆர் என்பது ஒரு திட்டமிட்ட சூழ்ச்சி. இதனால் குடிமக்கள் துன்புறுத்தப்படுகிறார்கள். மேலும் தேவையற்ற அழுத்தங்களால் நிகழும் பி.எல்.ஓ- களின் இறப்புகள் "இணை சேதம்" என்று புறந்தள்ளப்படுகின்றன. இது ஒரு சதி. அதிகாரத்தில் இருப்பவர்களைப் பாதுகாக்க ஜனநாயகத்தின் தியாகம் செய்யப்படுகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.