Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பாடகர் ஜெயச்சந்திரன் மறைவு - பிரதமர் #Modi இரங்கல்!

02:21 PM Jan 10, 2025 IST | Web Editor
Advertisement

பாடகர் ஜெயச்சந்திரன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

Advertisement

தென்னிந்திய அளவில் பிரபலமான பின்னணிப் பாடகராக அறியப்பட்டவர் பி.ஜெயச்சந்திரன் (80). கேரளாவைச் சேர்ந்த இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் 16,000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். தமிழில் மூன்று முடிச்சு, அந்த 7 நாட்கள், வைதேகி காத்திருந்தாள், இணைந்த கைகள் உள்ளிட்ட பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார்.

இந்த நிலையில், பாடகர் ஜெயச்சந்திரன் உடல்நலக் குறைவு காரணமாக கேரளாவில் உள்ள திருச்சூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பாடகர் ஜெயச்சந்திரன் சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். அவரது மறைவிற்கு அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், பாடகர் ஜெயச்சந்திரன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது,

"ஜெயச்சந்திரன் பலவிதமான உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் பழம்பெரும் குரலால் ஆசீர்வதிக்கப்பட்டவர். பல்வேறு மொழிகளில் அவரது ஆத்மார்த்தமான பாடல்கள் வரும் தலைமுறையினரின் இதயங்களை தொடும். அவரது மறைவால் வேதனை அடைந்தேன். இந்த துயரமான நேரத்தில் எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினருடனும் ரசிகர்களுடனும் உள்ளன"

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Advertisement
Next Article