Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தூத்துக்குடியில் ரூ.36,238 கோடி முதலீட்டுப் பணிகளை தொடங்கிய சிங்கப்பூரின் செம்கார்ப்!

01:21 PM Jul 18, 2024 IST | Web Editor
Advertisement

தூத்துக்குடியில் பசுமை ஹைட்ரஜன் அலகு அமைக்க ரூ.36,238 கோடி முதலீடு செய்வதற்கான ஆரம்பகட்ட ஒப்பந்தங்களில் சிங்கப்பூரின் செம்கார்ப் நிறுவனம் கையெழுத்திட்டது.

Advertisement

கடந்த ஜனவரி 7, 8-ம் தேதிகளில் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டு நடைபெற்றது. இந்த மாநாட்டில் 50 நாடுகளைச் சோ்ந்த தொழில் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். தமிழ்நாட்டிற்கான ரூ.5.5 லட்சம் கோடி முதலீடுகளை ஈா்க்க அரசு திட்டமிட்டிருந்தது . இந்த நிலையில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024 தொடங்கிய முதல் நாளிலேயே ரூ.5.5 இலட்சம் கோடி முதலீடு கிடைத்துள்ளது.

இந்த மாநாட்டில், சிங்கப்பூரின் செம்கார்ப் நிறுவனம் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் பசுமை ஹைட்ரஜன் அலகு அமைக்க ரூ.36,238 கோடி முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் பசுமை ஹைட்ரஜன் அலகு அமைக்க செம்கார்ப் நிறுவனத்துடன் ரூ.36,238 கோடி முதலீடு செய்வதற்கான ஆரம்ப கட்ட ஒப்பந்தங்களில் கையெழுத்திடத் தொடங்கியுள்ளது.

இதையும் படியுங்கள் : துவரம் பருப்பு, பாமாயில் கொள்முதல் செய்ய டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு!

இதன் அடிப்படையில் தூத்துக்குடி பகுதியில் சுமார் 1,500 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பசுமை ஹைட்ரஜனை ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்வதற்காக செம்ப்கார்ப் நிறுவனம் ஜப்பானிய நிறுவனங்களான Sojitz Corp மற்றும் Kyushu Electric Power உடன் இணைந்து இந்த பணியை மேற்கொள்ளயுள்ளது.

Tags :
agreementsgreen hydrogen unitinvestshemcorpSingaporeTamilNaduTuticorin
Advertisement
Next Article