"Thug Life" -க்கு பின் சிம்புவின் அடுத்த திரைப்படம் - இணையத்தில் வைரலாகும் தகவல்!
நடிகர் சிம்புவின் 50வது திரைப்படம் குறித்த தகவல்கள் இணையத்தில் பரவிவருகின்றன.
கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் "Thug Life" என்ற திரைப்படத்தில் பிசியாக நடித்து வருகின்றார் பிரபல நடிகர் சிலம்பரசன். தமிழ் திரையுலகில் மிகச்சிறந்த நடிகராக வலம்வந்து கொண்டிருக்கும் சிம்பு, தமிழைத் தவிர பிற மொழிகளில் பெரிய அளவில் நடித்ததில்லை. மேலும் கடந்த ஆண்டுகளாகவே சிலம்பரசன் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் பெரிய அளவில் ஹிட் ஆகாமல் இருந்து வருவது அவருடைய ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய சோகத்தை ஏற்பத்தியுள்ளது.
இதனிடையே, கடந்த ஆண்டு இறுதியில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தனது 48வது திரைப்பட பணிகளை சிம்பு தொடங்கினார். சில மாதங்களிலேயே அப்படத்தில் எந்தவித வளர்ச்சியும் பெறாமல் இருந்த நிலையில், மணிரத்தினம் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் உருவாகும் "தக் லைஃப்" திரைப்படத்தில் சிலம்பரசன் நடிக்க தொடங்கினார். ஒரு கட்டத்தில் "தக் லைஃப்" திரைப்படம் சிலம்பரசனின் 48வது திரைப்படமாக வெளியாகும் என்றும், தேசிங்கு பெரியசாமியின் படம் 49வது திரைப்படமாக வெளியாகும் என்றும் முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் சிம்புவின் 50வது திரைப்படம் குறித்த சில தகவல்கள் வெளியாகி வருகின்றன. இருப்பினும் இந்த தகவல்கள் குறித்து எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. கடந்த 2023-ம் ஆண்டு ஆண்டனி ஜோசப் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்திய படம் 2018. இப்போது ஆண்டனி ஜோசப் தமிழில் ஒரு திரைப்படத்தை இயக்க உள்ளதாக சில தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேலும் வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.
நடிகர் சிம்பு ஏற்கனவே வேல்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு திரைப்படத்தில் நடிக்கவிருந்த நிலையில், தற்பொழுது ஆண்டனி ஜோசப் திரைப்படத்தில் சிம்பு நடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும், அதே போல இந்த திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் இணைய உள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்பொது தனது "கூலி" திரைப்படத்தில் நடித்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அடுத்தபடியாக மலையாள இயக்குனர் ஒருவருடன் இணைய உள்ளதாக சில தினங்களுக்கு முன்பு ஒரு தகவல் வெளியானது. எனவே இந்த அனைத்து விஷயங்களும் இப்பொது ஒரே நேர்கோட்டில் வரும் நிலையில், சிம்பு & சூப்பர் ஸ்டார் இணைவது 50% உறுதியாகியுள்ளது.