For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

STR48 - படக்குழு வெளியிட்ட லேட்டஸ்ட் அப்டேட்…!

10:02 PM Jan 31, 2024 IST | Web Editor
str48   படக்குழு வெளியிட்ட லேட்டஸ்ட் அப்டேட்…
Advertisement

நடிகர் சிம்பு நடிக்கும் ‘STR48’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பிப். 2ம் தேதி தொடங்கவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Advertisement

நடிகர் சிம்புவின் சமீபத்திய படமான “பத்து தல” படத்தின் வெற்றியை தொடர்ந்து சிம்பு நடிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த திரைப்படத்தை துல்கர் சல்மான் , ரிது வர்மா மற்றும்  ரக்‌ஷன் நடிப்பில் வெளியாகி பிரம்மாண்டமான வெற்றியை பெற்ற ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’  படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார். நடிகர் கமல்ஹாசனின் ”ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனம்” தயாரிக்க உள்ளது.

சுமார் ரூ.100 கோடி பட்ஜெட்டில் இத்திரைப்படம் உருவாக இருப்பதாகவும், சிம்பு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதில் முற்றிலும் வித்தியாசமான இருவேடங்களில் சிம்பு நடிக்கிறார்.

இந்த STR 48 திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்பு இந்த காம்போவில் விண்ணைத்தாண்டி வருவாயா, வெந்து தணித்தது காடு, பத்து தல உள்ளிட்ட படங்கள் வெளி வந்து, அதன் பாடல்கள் இன்று வரை பலரின் ப்ளே லிஸ்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷ்னல் தயாரிப்பில் சிம்பு நடிக்கும் ‘STR48’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 2ம் தேதி தொடங்கவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Tags :
Advertisement