For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சிக்கிம் | ஜூன் 9ல் முதலமைச்சராக பதவியேற்கிறார் பிரேம் சிங் தமாங்!

10:03 PM Jun 05, 2024 IST | Web Editor
சிக்கிம்   ஜூன் 9ல் முதலமைச்சராக பதவியேற்கிறார் பிரேம் சிங் தமாங்
Advertisement

சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா தலைவர் பிரேம் சிங் தமாங் ஜூன் 9ம் தேதி 2வது முறையாக முதலமைச்சராக பதவியேற்கப் போவதாக அறிவித்துள்ளார். 

Advertisement

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று (ஜூன் 4) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டன.  இத்தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அங்கம் வகிக்கும் INDIA கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவியது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 தொகுதிகளில் வெற்றி பெற்றது .  INDIA கூட்டணி 234 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

முன்னதாக அருணாச்சல் பிரதேசம் மற்றும் சிக்கிம் மாநில சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தேதியில் மாற்றம் செய்து தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி இந்த இரு மாநில சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜூன் 2ம் தேதி நடைபெற்றது.  அதில் அருணாச்சல் பிரதேசத்தில் பாஜக ஆட்சியை தக்கவைத்தது.  சிக்கிமில் மொத்தமுள்ள 32 தொகுதிகளில், 31 இடங்களில் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சாவும், 1 இடத்தில் சிக்கிம் ஜனநாயக முன்னணியும் வெற்றி பெற்றது.  பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எந்த இடத்திலும் வெற்றி பெறவில்லை.

இதன்மூலம் 31 இடங்களை கைப்பற்றிய சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி, அம்மாநிலத்தில் ஆட்சியை தக்கவைத்தது.  இந்த நிலையில், சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா தலைவர் பிரேம் சிங் தமாங், ஜூன் 9ம் தேதி 2வது முறையாக முதலமைச்சராக பதவியேற்கப் போவதாக அறிவித்துள்ளார்.  இதுகுறித்து முதலமைச்சர் பிரேம் சிங் தமாங் கூறியதாவது,

"புதிய அமைச்சர்கள் குழுவின் பதவியேற்பு விழா,  5 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது போலவே,  ஜூன் 9ம் தேதி பால்ஜோர் மைதானத்தில் நடைபெறும்.  இந்த நிகழ்ச்சியில் சிக்கிமின் பல்வேறு பகுதிகளில் இருந்து,  ஏராளமான எஸ்கேஎம் கட்சியினர்  கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.  கட்சியின் மீது நம்பிக்கை வைத்த மக்களுக்கு நன்றி.  எஸ்கேஎம் தலைவர்கள் மற்றும் அதன் தொண்டர்களின் அர்ப்பணிப்பு, கடின உழைப்பு, கட்சிக்கு மகத்தான வெற்றிக்கு வழிவகுத்தது” என்றார்.

Tags :
Advertisement