For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

நவ.17-ம் தேதி ஓடிடியில் வெளியாகிறது ‘சித்தா’..!

06:32 AM Nov 11, 2023 IST | Jeni
நவ 17 ம் தேதி ஓடிடியில் வெளியாகிறது ‘சித்தா’
Advertisement

சித்தார்த் நடிப்பில் வெளியான ‘சித்தா’ திரைப்படம் வரும் 17-ம் தேதி டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

Advertisement

ETAKI ENTERTAINMENT தயாரிப்பில் சித்தார்த், நிமிஷா சஜயன் நடிப்பில் கடந்த செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘சித்தா’. இந்த படத்தை பண்ணையாரும் பத்மினியும் படத்தின் இயக்குநர் அருண்குமார் எழுதி, இயக்கியுள்ளார். இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகரின் இசையில் உருவான இப்படம் சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஃபேமிலி ஆடியன்சை கவர்ந்த இப்படத்திற்கு பல்வேறு திரைப் பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

ரூ.5 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் உலகளவில் ரூ.25 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், சித்தா திரைப்படத்தின் வரவேற்பைக் கண்ட ஓடிடி தளங்கள் இப்படத்தின் வெளியீட்டு உரிமையைப் பெற போட்டிபோட்டன. முடிவில், டிஸ்னி + ஹாட்ஸ்டார் நிறுவனம் பெரிய தொகைக்கு சித்தா படத்தை வாங்கியதாகக் கூறப்பட்டது.

இதையும் படியுங்கள் : தமிழ் பொண்ண கல்யாணம் பண்ணா லைஃப் பிரைட்டா இருக்கும்... - மேக்ஸ்வெல்லுக்கு குவிந்த வித்தியாசமான பாராட்டு...!

ஓடிடியில் ஆயுதபூஜையை முன்னிட்டு ‘சித்தா’ வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வரும் நவம்பர் 17-ம் தேதி டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement