For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

‘NO MORE SILENCE' : பேட் கம்மின்ஸ்க்கு பதிலடி கொடுத்த கொல்கத்தா அணி.. வைரலாகும் வீடியோ!

11:40 AM May 26, 2024 IST | Web Editor
‘no more silence    பேட் கம்மின்ஸ்க்கு பதிலடி கொடுத்த கொல்கத்தா அணி   வைரலாகும் வீடியோ
Advertisement

ஹைதராபாத் அணிக்கு எதிரான வெற்றியை வெளிகாட்டும் வகையில் கொல்கத்தா அணி தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Advertisement

ஐபிஎல் தொடரின் இறுதிபோட்டி சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடைபெற்றது.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 18.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து விளையாடிய கொல்கத்தா அணி 10.3 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 114 ரன்கள் எடுத்து ஐபிஎல் கோப்பையை வென்றது.

இதன்மூலம் சென்னை, மும்பை அணிகளை அடுத்து அதிக கோப்பைகளை வென்ற அணியாக கொல்கத்தா உள்ளது. மேலும் ஐபிஎல் கோப்பையை வென்ற ஐந்தாவது கேப்டன் என்ற பெருமையை பெற்றார் ஸ்ரேயாஸ் ஐயர். இந்நிலையில் பேட் கம்மின்ஸ் பாணியில் கொல்கத்தா அணி கேப்டன் ஸ்ரேயாஸ் எடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

வெற்றியைத் தொடர்ந்து கொல்கத்தா அணி தனது எக்ஸ் தளத்தில் ‘NO MORE SILENCE’ என குறிப்பிட்டு, தங்கள் வெற்றியை கொண்டாடும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ஸ்ரேயாஸ், பேட் கம்மின்ஸ் பாணியில் ‘அமைதி’ எனக் கூறுவது போல் வாயில் விரல் வைத்திருப்பார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கடந்த ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இந்தியாவை வீழ்த்தி கோப்பையை வென்றது. போட்டிக்கு முன்பு பேசிய பேட் கம்மின்ஸ், போட்டி இந்தியாவில் நடப்பதால் இந்திய ரசிகர்களே மைதானத்தில் அதிகம் இருப்பர். அவர்கள் இந்தியாவிற்கே அதிகம் குரல் கொடுப்பர். அது எங்களை கொஞ்சம் பதட்டத்திற்குள்ளாக்கும். இந்திய ரசிகர்களை அமைதியாக்குவோம் எனக் கூறினார். அவர் வாயால் சொன்னதை போலவே செயலில் காட்டியது வரலாறாக மாறியது.

அதிலிருந்து பேட் கம்மின்ஸ் என்றாலே இந்தியர்களுக்கு ‘சைலன்ஸ்’ என்னும் அந்த வார்த்தையே நினைவுக்கு வருகிறது. இந்நிலையில் நேற்று பேட் கம்மின்ஸ் ரசிகர்களை சேப்பாக்கம் மைதானத்தில் ஸ்ரேயாஸ் அமைதிப்படுத்தினார். அதனைத்தொடர்ந்து கொல்கத்தா அணி பகிர்ந்த இந்த வீடியோவில் ஸ்ரேயாஸ் ‘சைலன்ஸ்’ என போஸ் கொடுத்திருப்பார். இந்நிலையில் இது பேட் கம்மின்ஸ்க்கு பதிலடி கொடுப்பது போன்று இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Tags :
Advertisement