For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#Instagram -ல் பிரதமர் மோடியை முந்திய ஷ்ரத்தா கபூர்!

11:06 AM Aug 21, 2024 IST | Web Editor
 instagram  ல் பிரதமர் மோடியை முந்திய ஷ்ரத்தா கபூர்
Advertisement

இன்ஸ்டாகிராம் கணக்கில் பிரதமர் நரேந்திர மோடியை விட பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது.

Advertisement

பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இன்ஸ்டாகிராம் கணக்கை பின்தொடர்பவர்களை விட அதிகமான ஃபாலோவர்களை கொண்டுள்ளார். ஷ்ரத்தா கபூரின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 9.14 கோடியாக உள்ளது. அதேபோல், 9.13 கோடி பின்தொடர்பவர்களை பிரதமர் நரேந்திர மோடியையின் இன்ஸ்டாகிராம் பக்கம் கொண்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியான திகில், நகைச்சுவை திரைப்படமான "ஸ்ட்ரீ 2" மூலம் ஷ்ரத்தா கபூர் அதிகம் பேசப்பட்டார். அதன்பிறகு இன்ஸ்டாகிராமில் அவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக தெரிகிறது. இந்த திரைப்படம் வெளியான ஒரு வாரத்தில் சுமார் ரூ.300 கோடி வசூலை நெருங்கியதாக படக்குழு தெரிவித்துள்ளது.

இதேபோல் விராட் கோலி 27.1 கோடி மற்றும் பிரியங்கா சோப்ரா 9.18 கோடி பின்தொடர்பவர்களுடன் இன்ஸ்டாகிராமில் முன்னிலையில் உள்ளனர். அதேபோல், ஆலியா பட் 8.51 கோடி பின்தொடர்பவர்கள் மற்றும் தீபிகா படுகோன் 7.98 கோடி பின்தொடர்பவர்களை கொண்டுள்ளனர். தற்போது இவர்களின் வரிசையில் ஷ்ரத்தா கபூர் இணைந்துள்ளார்.

ஆனால் ட்விட்டர் (எக்ஸ்) தளத்தில் 10.1 கோடிக்கும் அதிகமான பின்தொடர்பவர்களுடன் உலகளாவிய தலைவராக பிரதமர் மோடி இருக்கிறார். ட்விட்டரில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், துபாய் அரசர் ஷேக் முகமது மற்றும் போப் பிரான்சிஸ் போன்ற உலகத் தலைவர்களை விட பிரதமர் மோடி முன்னிலையில் உள்ளார். பிரதமரின் (PMO) அலுவலகத்தின் ட்விட்டர் கணக்கில் 5.6 கோடிக்கும் அதிகமான பின்தொடர்பவர்கள் உள்ளனர்.

இந்திய அரசியல்வாதிகளில், உயர்மட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு 2.67 கோடி பின்தொடர்பவர்கள் உள்ளனர். டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 2.76 கோடி பின்தொடர்பவர்கள் உள்ளனர்.

Tags :
Advertisement