Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"நிலவின் நிலையான நேரத்தை ஆய்வு செய்ய வேண்டும்" - நாசாவுக்கு அமெரிக்கா அறிவுறுத்தல்!

11:35 AM Apr 04, 2024 IST | Web Editor
Advertisement

நாசா மற்றும் மற்ற விண்வெளி மையங்கள் ஒருங்கிணைந்து நிலவின் நிலையான நேரத்தை ஆய்வு செய்ய வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Advertisement

அமெரிக்க அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கொள்கைகள் பிரிவின் தலைவர் நாசாவிடம்,  ஒருங்கிணைந்த நிலவு நேரத்துக்கான திட்டத்தை மற்ற அரசு அமைப்புகளுடன் இணைந்து 2 ஆண்டுகளுக்குள் வடிவமைக்குமாறு கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படியுங்கள் : தைவானை தொடர்ந்து ஜப்பானில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 6.3 ஆகப் பதிவு!

இதற்கு முன்னபாக,  ஐரோப்பிய விண்வெளி மையம் 2023 ஆம் ஆண்டு இந்த திட்டத்தை அறிவித்தது.  இந்தத் திட்டம்  பற்றி பல்வேறு நாடுகளின் விண்வெளி அமைப்புகள் கலந்து கொண்டு நெதர்லாந்தில் நடைபெற்ற கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.  அந்த கூட்டத்தில் பொதுவான நிலவு நேரம் உருவாக்க வேண்டிய அவசியத்தை பற்றி விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியது.

பூமியை விட நிலவில் ஈர்ப்பு சக்தி குறைவாக உள்ள நிலையில் கடிகாரம் அங்கு விரைவாக இயங்கும்.  நாள் ஒன்றுக்கு 56 மைக்ரோசெகன்ட் அதிகரித்து வரும்.  நிலவில் ஒரு நாள் என்பது பூமியில் 29.5 நாட்களாகும்.  நாசா மற்றும் மற்ற விண்வெளி மையங்கள் ஒருங்கிணைந்து நிலவின் நிலையான நேரத்தை ஆய்வு செய்ய வேண்டும் என அமெரிக்காவில் உள்ள வெள்ளை மாளிகை அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags :
Americaconstant timeinstructionMoonNASAnational aeronautics and space administrationScientistTimeUS
Advertisement
Next Article