நவாஸ் ஷரிஃப் அரசியலில் இருந்து விலகலா..? - அவரது மகள் மரியம் நவாஸ் சொன்ன சுவாரஸ்ய தகவல்!
நவாஸ் ஷரிஃப் அரசியலில் இருந்து விலக உள்ளதாக எழுந்த தகவல்களை அடுத்து இது தொடர்பாக நவாஸ் ஷரிஃபின் மகளான மரியம் நவாஸ் விரிவாக பேசியுள்ளார்.
பாகிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தல் கடந்த பிப்ரவரி 8-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில், சிறையில் உள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் தெஹ்ரீப்-இ-இன்சாப் கட்சியின் ஆதரவு பெற்ற 101 சுயேட்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.
ஆட்சி அமைக்க 133 இடங்கள் தேவை என்ற நிலையில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் புதிய அரசு அமைப்பதில் குழப்பம் நீடித்து வந்தது. இதனைத் தொடர்ந்து நவாஸ் ஷரீஃபின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி , பிலாவல் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆகியவை கூட்டணி அரசு அமைக்க முடிவு செய்தன.
இந்த நிலையில் முன்னாள் பிரதமரான நவாஸ் ஷரீஃப் பிரதமராக போட்டியிடவில்லை என அறிவித்தவுடன் அவர் அரசியலில் இருந்து முழுமையாக விலகப் போவதாக தகவல்கள் கசிந்தன. ஆனால் இதற்கு நவாஸ் ஷரீஃபின் மகளான மரியம் நவாஸ் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது..
ஏற்கெனவே, எந்தவொரு கூட்டணி அரசிலும் இடம் பெற மாட்டேன் என்று தேர்தல் பிரசாரத்தின்போது நவாஸ் ஷரீஃப் பேசியிருந்தார். நடந்து முடிந்த தேர்தலில் கூட்டணி ஆட்சி அமைந்துள்ள நிலையில் தனது கூற்றின்படி அவர் பிரதமராவதில் இருந்து விலகியுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அவரைப் பற்றித் தெரிந்தவர்களுக்கு அவர் சொன்ன சொல்லில் உறுதியாக இருப்பவர் என்பதும் நன்கு தெரியும் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.