Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

'கேம் சேஞ்சர்' படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் இணையத்தில் கசிவு! - படக்குழுவினர் அதிர்ச்சி!

09:00 AM Jul 17, 2024 IST | Web Editor
Advertisement

'கேம் சேஞ்சர்' திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் ராம்சரண் நடிக்கும் காட்சிகள் இணையத்தில் கசிந்ததால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு ராம்சரண், இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 'கேம் சேஞ்சர்' திரைப்படத்தில் நடித்துள்ளார். அரசியல் அதிரடி திரில்லர் திரைப்படமாக இது உருவாகியுள்ளது. இயக்குனர் ஷங்கர் தெலுங்கு மொழியில் இயக்கும் முதல் படம் இதுவாகும். ஷங்கருடன் இணைந்து இயக்குனர் கார்த்தி சுப்புராஜ் இப்படத்திற்கு கதை எழுதியுள்ளார்.

இதில், கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்.ஜே சூர்யா, சமுத்திரக்கனி, நாசர் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். திரைப்படத்தின் வெளியீட்டு தேதி இன்னும் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை.

இதையும் படியுங்கள் : டி.என்.பி.எல். கிரிக்கெட் : 8 விக்கெட் வித்தியாசத்தில் கோவை அணி அபார வெற்றி!

இந்நிலையில், இப்படத்திற்கான படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் உள்ள ஆர்.கே கடற்கரையில் நடைபெற்றது. ராம் சரண் பிற நடிகர்களுடன் விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட காட்சி எக்ஸ் தள பக்கத்தில் கசிந்துள்ளது. இந்த காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

Tags :
cinema updateGameChangermoiveramcharanshankarSJSuryathaman
Advertisement
Next Article