அமெரிக்க பல்கலைக்கழக வளாகத்தில் துப்பாக்கிச்சூடு | 3 பேர் பலி!
10:46 AM Dec 07, 2023 IST | Web Editor
Advertisement
லாஸ் வேகாஸில் உள்ள நெவாடா பல்கலைக்கழக வளாகத்தில் இன்று(நவ.,07) நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டனர்.
Advertisement
அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நெவாடா பல்கலைக்கழகம் உள்ளது. உள்ளூர் நேரப்படி புதன்கிழமை காலை இந்த பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இதில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒரு படுகாயத்துடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
துப்பாக்கிச் சூட்டுக்கு காரணமான சந்தேக நபரும் இதில் பலியாகிவிட்டதாக போலீசார் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த நபர் ஆபத்தான நிலைமையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.