Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

விஜய் தேவரகொண்டா - கீர்த்தி சுரேஷ் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்!

விஜய் தேவரகொண்டா, கீர்த்தி சுரேஷ் இணைந்து நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு பணிகள் பூஜையுடன் தொடங்கியது.
03:01 PM Oct 11, 2025 IST | Web Editor
விஜய் தேவரகொண்டா, கீர்த்தி சுரேஷ் இணைந்து நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு பணிகள் பூஜையுடன் தொடங்கியது.
Advertisement

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் தேவரகொண்டா. இவர் நடிப்பில் அண்மையில் வெளியான 'கிங்டம்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இப்படத்தில் பாக்யஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த நிலையில், விஜய் தேவரகொண்டாவின் புதிய படம் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Advertisement

இதையும் படியுங்கள் : Rain Alert | எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? 

ரவி கிரண் கோலா இயக்கும் இப்படத்தை பிரபல தயாரிப்பாளரான தில் ராஜு தயாரிக்கிறார். இப்படத்தில் விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் பூஜையுடன் தொடங்கியது. இதில் விஜய் தேவரகொண்டா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Tags :
cinemaKeerthy Sureshmovie updateshootingvijay devarakonda
Advertisement
Next Article