ஐதராபாத்தில் 'குட் பேட் அக்லி' பட சூட்டிங்.. சண்டை பயிற்சியில் அஜித்...
நடிகர் அஜித் - ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகவுள்ள படம் குட் பேட் அக்லி. இந்தப் படத்தின் சூட்டிங் ஜூன் மாதத்தில் திட்டமிடப்பட்ட சூழலில் விடாமுயற்சி படத்தின் சூட்டிங் தொடர்ந்து தள்ளிப் போவதால் தற்போது மே மாதத்திலேயே குட் பேட் அக்லி படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் அஜித் குமார் துணிவு படத்திற்கு பிறகு, மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பில் நடித்து வருகிறார். துணிவு திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதால் இந்த படத்தையும் ஹிட் படமாக கொடுக்க வேண்டும் என்று முனைப்பில் உள்ளார். லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் அனிருத் இசையமைக்கிறார்.
இப்படத்தில், த்ரிஷா கதாநாயகியாக இப்படத்தில் நடிக்க, அர்ஜூன், ஆரவ், ரெஜினா காஸண்ட்ரா உள்ளிட்ட பலரும் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று முடிந்த நிலையில், படப்பிடிப்பு முடிந்து முன்னதாக படக்குழு சென்னை திரும்பியது. இந்த படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத்தில் நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், அஜித்தின் அடுத்த படம் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. அஜித் குமாரின் அடுத்த படமான ‘AK 63’ திரைப்படத்துக்கு “குட் பேட் அக்லி” (GoodBadUgly) எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. அஜித்தின் ஏகே 63 படம் 2025-ம் ஆண்டு பொங்களுக்கு வெளியாகும் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது.
படத்தில் நடிகைகள் சிம்ரன் அல்லது மீனா இருவரில் ஒருவர் அஜித்திற்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் முன்னதாக அஜித்திற்கு ஜோடியாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது குறித்த இறுதி கட்ட பேச்சு வார்த்தைகள் நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
அடுத்த வார ஷெட்யூலில் ஆக்ஷன் காட்சிகள் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதற்கான ரிகர்சலை தற்போது ஐதராபாத்தில் அஜித் மேற்கொண்டு வருவதாகவும் படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. படத்தில் சுப்ரீம் சுந்தர் மாஸ்டர் ஸ்டண்ட் மாஸ்டராக இணைந்துள்ளார். அனிமல், துணிவு மற்றும் கங்குவா போன்ற படங்களை தொடர்ந்து இந்தப் படத்திலும் சுப்ரீம் சுந்தர் மாஸ்டர் இணைந்துள்ளார்.
இந்நிலையில் ரிகர்சலுடன் இந்த படத்தின் ஆக்சன் காட்சிகளை அவர் நடிக்கவுள்ளதால் படத்தின் ஸ்டண்ட் காட்சிகள் மேலும் சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கலாம். ஹாலிவுட்டில் வெளியாகி சக்கைபோடு போட்ட பழைய க்ளாசிக் கௌபாய் திரைப்படத்தின் பெயர் “The Good Bad and The Ugly” என்பது குறிப்பிடத்தக்கது.