For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் பயங்கரம்!... இசை அரங்கிற்குள் துப்பாக்கி சூடு | 40 பேர் பலி; 100+ காயம்!

07:16 AM Mar 23, 2024 IST | Web Editor
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் பயங்கரம்      இசை அரங்கிற்குள் துப்பாக்கி சூடு    40 பேர் பலி  100  காயம்
Advertisement

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஏராளமானோர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

மாஸ்கோ நகரில் அமைந்துள்ள அரங்கு ஒன்றில், பிரபல ரஷ்ய ராக் இசைக்குழுவான Picnic-யின் நிகழ்ச்சிக்காக மக்கள் பலர் கூடியிருந்தனர். அப்போது பல துப்பாக்கி ஏந்திய நபர்கள் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். அவர்கள் பார்வையாளர்கள் மீது தானியங்கி துப்பாக்கிச்சூடு செய்துள்ளனர்.

மேலும் அரங்கினை தீயிட்டு கொளுத்தியுள்ளனர். இதனால் உண்டான தீப்பிழம்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  இச்சம்பவத்தில் 40 பேர் பலியாகினர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளது.

தாக்குதல் நடத்தியவர்கள் வெடி மருந்துகளை வீசியதால் பாரிய தீ விபத்து ஏற்பட்டதாக ரஷ்ய அதிகாரிகள் தரப்பு தெரிவிக்கின்றன. மேலும், மக்கள் அங்கிறுந்து வெளியேற்றப்பட்டு, அப்பகுதிக்கு பயங்கரவாத தடுப்புப் பிரிவுகள் அனுப்பப்பட்டாதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தாக்குதல் சமீபத்திய ஆண்டுகளில் ரஷ்யாவில் நடந்த மிக மோசமான தாக்குதல் ஆகும். தேர்தலில் தற்போதையே அதிபர் அதிபர் விளாடிமிர் புடின் (Vladimir Putin) மீண்டும் வெற்றி பெற்ற  சில நாட்களுக்குப் பிறகு நடந்துள்ளது.

மாஸ்கோ பிராந்தியத்தின் ஆளுநரான Andrei Vorobyov, சம்பவம் நடந்த பகுதிக்கு சென்று விசாரணை குழுவை அமைத்ததாக கூறினார். இந்த பயங்கர தாக்குதலால் மாஸ்கோவின் விமான நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் பாதுகாப்பு  கடுமையாக்கப்பட்டுள்ளதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags :
Advertisement