Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஜமைக்காவில் துப்பாக்கி சூடு... #Nellai இளைஞர் உயிரிழப்பு!

09:14 AM Dec 19, 2024 IST | Web Editor
Advertisement

ஜமைக்கா நாட்டில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் நடந்த துப்பாக்கி சூட்டில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

மேற்கிந்தியத் தீவுகளில் ஒன்றான ஜமைக்கா நாட்டில், பிராவிடன்ஸ் தீவில் சூப்பர் மார்க்கெட் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த சூப்பர் மார்க்கெட்டை தென்காசி மாவட்டம் சுரண்டையைச் சேர்ந்த அரவிந்த் என்பவர் நடத்தி வருகிறார். இங்கு, திருநெல்வேலி மாவட்டம் டவுனை சேர்ந்த விக்னேஷ், சுந்தரபாண்டி, சுடலை மணி, ராஜாமணி ஆகிய 4 பேர் பணியாற்றி வந்தனர்.

இந்த நிலையில், இந்திய நேரப்படி இன்று அதிகாலை 1.30 மணியளவில் (ஜமைக்கா நேரப்படி செவ்வாய்க்கிழமை மாலை 3 மணி) சூப்பர் மார்க்கெட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த பணத்தை கொள்ளையடித்தனர். எதிர்பாராத வகையில் கொள்ளையர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் விக்னேஷ் என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இருவர் படுகாயம் அடைந்தனர்.

காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த விக்னேஷின் உடலை தமிழ்நாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று அவரது பெற்றோர் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயனிடம் மனு அளித்துள்ளனர். மேலும் துப்பாக்கி சூடு தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஜமைக்கா நாட்டில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் நடந்த துப்பாக்கி சூட்டில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement
Next Article