For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சல்மான்கான் வீடு அருகே துப்பாக்கிச்சூடு - குற்றவாளிகளை ஏப்.25 வரை காவலில் வைக்க மும்பை நீதிமன்றம் உத்தரவு!

05:04 PM Apr 16, 2024 IST | Web Editor
சல்மான்கான் வீடு அருகே துப்பாக்கிச்சூடு   குற்றவாளிகளை ஏப் 25 வரை காவலில் வைக்க மும்பை நீதிமன்றம் உத்தரவு
Advertisement

நடிகர் சல்மான்கான் வீடு அருகே நடைபெற்ற துப்பாக்கிச் சூடு வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரையும் ஏப்.25 ஆம் தேதி வரை காவலில் வைக்க மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Advertisement

பாலிவுட் நடிகர் சல்மான்கான் வீட்டின் முன் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு துப்பாக்கிச் சூடு நடைபெற்றது.  இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டனர்.  இது குறித்து குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  இத்துப்பாக்கிச் சூடு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சல்மான்கான் வீட்டை சுற்றி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

விசாரணை நடைபெற்று வந்தநிலையில்,  நேற்று இரவு குஜராத் மாநிலத்தில் இந்த இரண்டு குற்றவாளிகளையும் போலீசார் கைது செய்தனர்.  நேற்று கைது செய்யப்பட்டு மும்பைக்கு கொண்டு வரப்பட்ட இருவரும் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

விசாரணையின் போது குற்றவாளிகளை 14 நாட்களுக்கு காவலில் வைத்து விசாரிக்க காவல்துறை தரப்பில் அனுமதி கேட்கப்பட்ட நிலையில்,  9 நாட்களுக்கு காவலில் வைத்து விசாரிக்க மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு முன்பு மும்பை அருகில் உள்ள பன்வெல் என்ற இடத்தில் ஒரு மாதமாக தங்கியிருந்து கண்காணித்து வந்துள்ளனர்.  சல்மான் கானின் பன்வெல் பண்ணை வீட்டிற்கும் சென்று நிலைமையை ஆய்வு செய்துள்ளனர்.  பன்வெலில் முகம் தெரியாத நபர் மூலம் ரூ. 20,000-க்கு பழைய பைக் ஒன்றை வாங்கியுள்ளனர்.  5 முறை துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு பைக்கில் தப்பிய இருவரும்,  பைக்கை ஒரு இடத்தில் போட்டு விட்டு,  ஆட்டோ பிடித்து ரயில்வே ஸ்டேசன் சென்றுள்ளனர்.  அங்கிருந்து லோக்கல் ட்ரெயின் மூலம் சாண்டா குரூஸில் இறங்கியுள்ளனர்.  அங்கிருந்து விமான நிலையத்திற்கு சென்று தப்பியதாக போலீசார் தெரிவித்தனர்.

Tags :
Advertisement