Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#America-வில் வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு - மூவர் உயிரிழப்பு!

அமெரிக்காவில் வணிக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
09:08 AM Jan 29, 2025 IST | Web Editor
Advertisement

அமெரிக்காவில் சமீப காலமாக துப்பாக்கி கலாசாரம் அதிகரித்து வருகிறது. அவ்வப்போது நடைபெறும் துப்பாக்கி சூடு சம்பவங்கள் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. அமெரிக்காவில் 2024ம் ஆண்டில் மட்டும் 385 துப்பாக்கி சூடு சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இந்த நிலையில், அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Advertisement

அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் உள்ள எல்கார்ட் நகரில் வணிக வளாகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்குள்ள ஒரு கடைக்கு பொருட்கள் வாங்குவது போல் இளைஞர் ஒருவர் சென்றிருந்தார். அப்போது அவர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சுட ஆரம்பித்தார். இதில் கடைக்குள் இருந்த இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அருகில் இருந்தவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்திய இளைஞரை பிடிக்க முயன்றனர். அப்போது அந்த இளைஞர் போலீசாரை நோக்கியும் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரிகிறது. இதில் 2 போலீசார் படுகாயம் அடைந்தனர். அதற்கு பதிலடியாக போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் அந்த இளைஞர் கொல்லப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
AmericagunfiregunshotIndiananews7 tamilNews7 Tamil UpdatesPolicestoreSupre Market
Advertisement
Next Article