அமெரிக்காவில் பாரில் துப்பாக்கி சூடு - 4 பேர் உயிரிழப்பு!
அமெரிக்காவின் தெற்கு கரோலினாவில் செயின்ட் ஹெலினா தீவு பகுதியில் உணவு விடுதியுடன் கூடிய பார் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில், வழக்கம்போல் பலர் மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது, திடீரென சிலர் அங்கு நுழைந்தனர். பின்னர் அவர்கள் வைத்திருந்த துப்பாக்கியை வைத்து பாரில் இருந்தவர்களை நோக்கி சுட்டனர். இதில் பலர் பலத்த காயமடைந்தனர். துப்பாக்கி குண்டு சத்தம் கேட்டதும் பாரில் இருந்தவர்கள் அலறியடித்து தப்பியோடினர்.
இதையும் படியுங்கள் : Gold Rate | புதிய உச்சத்தில் தங்கம் விலை – இன்றைய நிலவரம் என்ன?
பாரில் இருந்தவர்கள் துப்பாக்கி சூட்டில் இருந்து தப்ப அருகில் இருந்த கடைகளுக்குள்ளும், கட்டிடங்களுக்கு புகுந்தனர். இந்த சம்பவம் குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த துப்பாக்கி சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும், 20 பேர் வரை காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.