#ShockingNews | பெண்களைக் கொன்று பன்றிகளுக்கு உணவளித்த கொடூரம் | போராட்டத்தில் குதித்த மக்கள்!
ஒரு விவசாயி மற்றும் அவரது ஊழியர்கள் 2 கறுப்பினப் பெண்களைக் கொன்று, அவர்களின் உடல்களைத் பன்றிகளுக்கு உணவளித்து ஆதாரங்களை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்ட கொடூர சம்பவம் தென்னாப்பிரிக்காவில் நடந்துள்ளது.
மரியா மக்காடோ (45) மற்றும் லூசியா என்ட்லோவ் (34) இருவரும் லிம்போபோ மாகாணத்தில் உள்ள பொலோக்வானே அருகே ஒரு பண்ணையில் உணவு தேடிக்கொண்டிருந்தபோது ஆகஸ்ட் மாதம் சுடப்பட்டதாக கூறப்படுகிறது.
குற்றத்தை மறைக்கும் முயற்சியில் அவர்களின் உடல்கள் பன்றிகளுக்கு உணவாக போட்டதாகக் கூறப்படுகிறது. பண்ணை உரிமையாளரான ஜகாரியா ஜோஹன்னஸ் ஆலிவியர் (60) மற்றும் அவரது இரண்டு ஊழியர்களான அட்ரியன் டி வெட்(19) மற்றும் வில்லியம் முசோரா (50)ஆகியோர் கொலைக்கான விசாரணைக்காகக் காத்திருக்கும் நிலையில், அவர்களுக்கு ஜாமீன் வழங்குவது குறித்து நீதிமன்றம் தற்போது பரிசிலினை செய்து வருகிறது.
இந்நிலையில், பொலோக்வானில் நீதிமன்ற அறைக்கு வெளியே ஆர்ப்பாட்டங்கள் வெடித்ததாகவும், ஆர்ப்பாட்டக்காரர்கள் பதாகைகளை ஏந்தியவாறும், சந்தேக நபர்களுக்கு ஜாமீன் மறுக்கப்பட வேண்டும் என்றும் கோரியதாக தெரிவித்து வருகின்றனர்.