வங்கதேசத்தை விட்டு வெளியேறி இந்தியாவுக்கு வந்தடைந்தார் ஷேக் ஹசீனா!
வங்கதேச நாட்டில் இருந்து வெளியேறிய ஷேக் ஹசீனா டெல்லிக்கு வந்தடைந்தார்.
இடஒதுக்கீட்டுக்கு எதிராக வங்கதேச அரசை கண்டித்தும், பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகக் கோரியும் கடந்த 3 வாரங்களாக மாணவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். மேலும் இதுதொடர்பான வன்முறையில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். தொடர் போராட்டத்தையடுத்து, வங்கதேச பிரதமர் பதவியை ஹசீனா ராஜிநாமா செய்ததாகவும், அங்கு ராணுவ ஆட்சி அமைக்கப்படுவதாகவும் வங்கதேச ராணுவத் தளபதி இன்று அறிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள் : வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியா வருகிறாரா? எங்கு தங்க போகிறார்?
பிரதமர் ஷேக் ஹசீனா, தலைநகர் டாக்காவில் இருந்து விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் வெளியேறியதாக கூறப்படுகிறது. வங்கதேசத்திலிருந்து வெளியேறிய ஷேக் ஹசீனா டெல்லி அருகே உள்ள ஹிண்டண் விமானப்படை தளத்திற்கு ராணுவ ஹெலிகாப்டரில் வந்தடைந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் அங்கிருந்து லண்டன் செல்லத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. உளவுத்துறை உள்ளிட்ட இந்திய பாதுகாப்பு முகமைகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றன. டெல்லியில் வங்கதேச தூதரகம் உள்ள பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.