Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சாட்டை துரைமுருகன் கைது - ஈபிஎஸ் கண்டனம்!

09:19 PM Jul 11, 2024 IST | Web Editor
Advertisement

சாட்டை துரைமுருகன் கைது நடவடிக்கைக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். 

Advertisement

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரையின் போது தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து அவதூறு பரப்பியதாக நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டதற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் :

"கடந்த மூன்றாண்டு திமுக ஆட்சியில் கொலைகாரர்கள், கொள்ளைக்காரர்கள், கடத்தல்காரர்கள், பாலியல் வன்கொடுமையாளர்கள் போன்றோர் சுதந்திரமாக நடமாடி வரும் நிலையில், ஆட்சியாளர்களின் தவறுகளை சுட்டிக்காட்டும் சமூக செயல்பாட்டாளர்கள் மீதும், அரசியல் கட்சியை சார்ந்தவர்கள் மீதும் சர்வாதிகார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது தொடர்கதையாகி வருகிறது.

இதையும் படியுங்கள் :திமுக கூட்டணியின் வெற்றி ரகசியம் என்ன? மக்களுடன் முதல்வர் திட்ட விரிவாக்க கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

தன் கையில் இருக்கும் அதிகாரம், நிரந்தரமானது. 'இம்' என்றால் சிறைவாசம் 'உம்' என்றால் வனவாசம் என்ற ரீதியில் வழக்குகள் போட்டு கைது செய்யும் அராஜகம் நாள்தோறும் அரங்கேறி வருகிறது. நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகளில் ஒருவரான திருச்சி சாட்டை துரைமுருகனை விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் அவர் தெரிவித்த ஒரு சில கருத்துகளுக்காக பொய் வழக்கு புனைந்து இந்த அரசு கைது செய்து சிறையில் அடைத்திருப்பது கண்டிக்கத்தக்கதாகும். அவர் மீதான வழக்குகளை திரும்பப்பெற்று, அவரை உடனடியாக விடுவிக்க வேண்டுமென்று காவல்துறை கையில் வைத்திருக்கும் திமுக முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்" இவ்வாறு அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags :
#ViluppuramarrestedcondemnedDMKElectionCommissionEPSNTKPMKShattai DuraimuruganvikravandiVikravandiByElection
Advertisement
Next Article