For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

வரலாறு காணாத உச்சத்தில் முடிந்த #ShareMarket!

06:52 PM Aug 29, 2024 IST | Web Editor
வரலாறு காணாத உச்சத்தில் முடிந்த  sharemarket
Advertisement

இன்றைய வர்த்தகத்தில் பங்குச் சந்தைகள் சாதனை உச்சத்தை எட்டியது. சென்செக்ஸ் 349.05 புள்ளிகள் உயர்ந்து 82,134.61 புள்ளிகளாகவும், தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 99.60 புள்ளிகள் உயர்ந்து 25,151.95 புள்ளிகளாகவும் முடிவடைந்தது.

Advertisement

காலை நேர வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 102.78 புள்ளிகள் குறைந்து 81,682.78 புள்ளிகளாக இருந்தது. அதே வேளையில் தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 34.85 புள்ளிகள் குறைந்து 25,017.50 புள்ளிகளாக வர்த்தகமானது. சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள 30 நிறுவனங்களில், அல்ட்ராடெக் சிமெண்ட், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், டாடா ஸ்டீல், ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல், ஆக்சிஸ் வங்கி, மாருதி, பார்தி ஏர்டெல், பவர் கிரிட் உள்ளிட்ட பங்குகள் சரிந்து வர்த்தகமான நிலையில் பஜாஜ் ஃபின்சர்வ், ஹிந்துஸ்தான் யூனிலீவர், ஹெச்டிஎஃப்சி வங்கி, டாடா மோட்டார்ஸ் ஆகிய பங்குகள் உயர்ந்து முடிந்தது.

துறைகளில் நிஃப்டி எஃப்எம்சிஜி அதிகபட்சமாக 1 சதவிகிதம் உயர்ந்தது. நிஃப்டி எனர்ஜி மற்றும் ஆட்டோ குறியீடும் 0.6 சதவிகிதம் வரை உயர்ந்தது. நிஃப்டி ஐடி பகுதி லாபத்தை சமன் செய்து 0.4 சதவிகிதம் மட்டுமே உயர்ந்தது. பார்மா, மெட்டல், ஹெல்த்கேர் மற்றும் ரியால்டி ஆகிய பங்குகள் அதிகம் சரிந்து பஜாஜ் ஃபின்சர்வ், பஜாஜ் ஃபைனான்ஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் மற்றும் பிபிசிஎல் ஆகிய பங்குகள் நிஃப்டியில் உயர்ந்து நிலையில் கிராசிம் இண்டஸ்ட்ரீஸ், மஹிந்திரா மற்றும் மஹிந்திரா, ஐச்சர் மோட்டார்ஸ், ஹிண்டால்கோ மற்றும் அதானி எண்டர்பிரைசஸ் ஆகிய பங்குகள் சரிந்து முடிந்தது. இன்றைய வர்த்தகத்தில் 1348 பங்குகள் ஏற்றத்திலும், 2421 பங்குகள் சரிந்தும், 95 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமானது.

ஆசிய சந்தைகளில் சியோல், டோக்கியோ, ஷாங்காய் மற்றும் ஹாங்காங் ஆகியவை சரிந்து வர்த்தகமானது. அமெரிக்க சந்தைகள் (புதன்கிழமை) நேற்று சரிவுடன் முடிவடைந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் புதன்கிழமை அன்று ரூ.1,347.53 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றனர். உலகளாவிய கச்சா எண்ணெய் 0.11 சதவீதம் உயர்ந்து பீப்பாய்க்கு 78.74 டாலராக உள்ளது.

Tags :
Advertisement