சென்னை அருகே 1000 ஆண்டுகள் பழமையான அகஸ்தீஸ்வரர் திருக்கோயிலில் சனிப்பெயர்ச்சி சிறப்பு வழிபாடு!
பல்லாவரம் அடுத்த பொழிச்சலூரில் உள்ள 1000 ஆண்டுகள் பழமையான அகஸ்தீஸ்வரர் திருக்கோவில் சனிப்பெயர்ச்சி வெகு விமர்சியாக நடைப்பெற்றது.
சனி பெயர்ச்சியை முன்னிட்டு சென்னை அடுத்த பல்லாவரம் பொழிச்சலூர் பகுதியில் உள்ள அருள்மிகு அகஸ்தீஸ்வரர் ஆலையத்தில் அமைந்துள்ள சனிபகவானுக்கு பால் பஞ்சாமிர்தம், பன்னீர், தேன், சந்தனம் போன்ற பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து கலசத்தில் கொண்டு வரப்பட்ட புனித நீரினால் அபிஷேகம் செய்தனர். பின்னர் அபிஷேக புனித நீரானது பக்தர்கள் மீது தெளிக்க பட்டது.
மேலும் சனிபகவானுக்கு வெள்ளி காப்பு அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்த கோடிகள் கலந்து கொண்டனர். அதுமட்டுமின்றி ஆலையத்தில் வெளிப்புற மேடையில் சிறப்பு அலங்காரத்திலும் சனி பகவான் காட்சி அளித்தார்.
அந்த பகுதியில் பெரிய அளவில் ஒம குண்டம் அமைத்து சனி பயிற்சி ஏற்படும் ராசி தாரர்களுக்கு பரிகார பூஜைகளும் நடைபெற்றது. ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த கோவிலில் நடைப்பெற்ற சனி பெயர்ச்சி சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.