ஷாருக்கானின் ‘கிங்’ பட டைட்டில் டீசர் வெளியீடு
பாலிவுட் முண்ணனி நடிகர்களில் ஒருவர் ஷாருக்கான். இவருக்கு இந்தியா மட்டுமின்றி மத்திய கிழக்கு, அமெரிக்கா போன்ற நாடுகளிலும் ரசிகர்கள் உள்ளனர். சமீபத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான பதான், ஜவான் ஆகிய படங்கள் 1000 கோடிக்கு மேல் வசூலித்து மிரட்டியது.
இந்த நிலையில் ஷாருக்கான் தற்போது 'வார் மற்றும் பதான்' ஆகிய படங்களை இயக்கிய சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் 'கிங்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடிக்கிறார். ஷாருக்கானின் ரெட் சில்லீஸ் நிறுவனம் இந்தப் படத்தின் மூலம் ஷாருக்கானின் மகள் சுஹானா கான் நடிகையாக அறிமுகமாகிறார். மேலும் இந்தப் படத்தில் தீபிகா படுகோன், அபிஷேக் பச்சன், அனில் கபூர், ஜாக்கி ஷெராஃப், ராணி முகர்ஜி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். அனிருத் ரவிசந்திரன் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
இந்த நிலையில் இன்று ஷாருக்கனின் பிறந்த நாளை முன்னிட்டு 'கிங்’ படத்தின் டைட்டில் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.