Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் சொத்துக்கள் மும்பையில் ஏலம்!

12:51 PM Jan 05, 2024 IST | Jeni
Advertisement

பிரபல நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் சொத்துக்களை மத்திய அரசு மும்பையில் இன்று ஏலம் விடுகிறது.

Advertisement

மும்பையில் 1993 ஆம் ஆண்டு நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தேடப்படும் குற்றவாளியாக நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் அறிவிக்கப்பட்டார்.  அவர் மீதும் அவரது டி கம்பெனி மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து இந்தியாவில் இருந்து இவர் தப்பியோடி,  பாகிஸ்தானில் பதுங்கியிருப்பதாக தகவல்கள் கசிந்தன.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், தாவூத் இப்ராஹிமுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும், அவருக்கு விஷம் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்றும்,  கராச்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் சமூக ஊடகங்களில் தகவல்கள் வேகமாக பரவின.  ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

இந்நிலையில்,  மும்பையில் உள்ள தாவூத் இப்ராஹிமுக்கு சொந்தமான சொத்துக்கள், ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள வீடுகள்,  விவசாய நிலங்களை மத்திய அரசு இன்று ஏலம் விடுகிறது.  கடத்தல் மற்றும் அந்நிய செலாவணி முறைகேடு தடுப்பு சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்ட தாவூத் இப்ராஹிம் சொத்துக்களை ஏலம் விட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

Tags :
assetsauctionCentralGovernmentDawoodibrahim
Advertisement
Next Article