சிறுமிகளிடம் பாலியல் சீண்டல் - பாதிரியார் ஜான் ஜெபராஜ் மீது போக்சோ வழக்கு!
கோவையைச் சேர்ந்த ஜான் ஜெபராஜ்(37) அங்குள்ள கிங் ஜெனரேஷன் தேவாலயத்தில் பாதிரியராக செயல்பட்டு வருகிறார். இவர் கிறிஸ்தவ சமூக மக்கள் மத்தியில் ஏராளமான கிறிஸ்தவ பாடல்கள் பாடி பிரபலமானார். இவர் கடந்த ஆண்டு மே மாதம் 21 ஆம் தேதி ஜி.என். மில்ஸ் பகுதியில் உள்ள தனது வீட்டில் நடந்த ஒரு விருந்து ஏற்பாடு செய்ததாகவும், அங்கு 17 மற்றும் 14 வயதுடைய இரண்டு சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது.
இச்சம்பவம் கடந்த 11 மாதங்களாக வெளிச்சத்திற்கு வராத நிலையில், சில நாட்களுக்கு முன்பு பாதிக்கப்பட்ட சிறுமிகளின் உறவினர்கள் மூலம் காவல்துறைக்கு பாலியல் வன்கொடுமை குறித்து தெரிய வந்துள்ளது.
உறவினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் கோவை மத்திய அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பாதிரியாராக ஜான் ஜெபராஜ் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து இச்சம்பவம் அறிந்து தலைமறைவாக உள்ள ஜான் ஜெபராஜை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.